உலக வங்கித்துறை மாற்றத்தால் நேரடி பணவீக்க தாக்கம் இராது

உலக வங்கித்துறை மாற்றத்தால் நேரடி பணவீக்க தாக்கம் இராது

3 mins read
5d811a9f-a505-4b1d-b5d9-6af126c55d1c
உல­கப் புகழ்­பெற்ற சுவிட்­சர்­லாந்­தின் கிரெ­டிட் சுவிஸ் வங்கியை அதன் போட்டி­ வங்கி யான யூபி­எஸ் வாங்­குவதாக தக­வல்­கள் வெளி­யாகி உள்ளன. படம்: ஏஎஃப்பி -

கிரெடிட் சுவிஸ் வங்கியை யூபிஎஸ் வாங்குவதன் தொடர்பில் அமைச்சர் விளக்கம்

அனைத்­து­லக வங்கித் தொழில்­துறை­யில் அண்­மை­யில் இடம்­பெற்று இருக்­கும் மாற்­றங்­கள் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கத்­தில் நீண்­ட­கா­லப் போக்­கில் நேரடி தாக்­கம் இராது என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

உல­கப் புகழ்­பெற்ற சுவிட்­சர்­லாந்­தின் கிரெ­டிட் சுவிஸ் வங்கியை அதன் போட்டி­ வங்கி யான யூபி­எஸ் வாங்­குவதாக தக­வல்­கள் வெளி­யாகி உள்ளன.

இந்த நிலை­யில், அமைச்­சர் மன்­றத்­தில் விளக்­கம் அளித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் பண­வீக்­கத்­திற்­கான வழி, நீண்­ட­கால அமைப்பு முறை அம்­சங்­க­ளைப் பொறுத்து இருக்­கிறது என்­றும் திடீர் திடீரென குறு­கிய காலத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய அதிர்ச்­சி­களால் தாக்கம் எது­வும் இருக்­காது என்­றும் பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் சக்தி ­யாண்டி சுப்­பாட்­டுக்கு அளித்த பதி­லில் அமைச்­சர் தெரி­வித்­தார்.

மக்­கள்­தொகை, உற்­பத்­தித் திற­னில் ஆதிக்­கம் செலுத்­தக்­கூ­டிய தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­கள், எதிர்­கா­லப் போக்­கு­கள், சிங்­கப்­பூர் நாண­யத்­தின் பரி­வர்த்­தனை விகி­தத்­தைப் பாதிக்­கக்­கூடிய உல­க­ம­யம் ஆகி­யவை நீண்­ட­கா­லப் போக்­கில் பண­வீக்கத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அம்­சங்­களில் உள்­ள­டங்­கும் என்றும் அவர் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யமும் அர­சாங்­க­மும் நீண்­ட­கால பண­வீக்க மதிப்­பீ­டு­களை அடிக்­கடி எப்­படி செய்­கின்­றன என்­பது பற்றி அந்த உறுப்­பி­னர் கேட்­டார்.

அண்­மை­யில் உல­க­ளா­விய நிலை­யில் ஏற்­ப­ட்டுள்ள வங்­கித் துறை மாற்­றங்­க­ளால் பண­வீக்­கத்­தி­லும் சிங்­கப்­பூ­ரின் நிதித் துறை­யி­லும் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் பற்­றி­யும் அவர் கேட்­டார்.

கிரெ­டிட் சுவிஸ் வங்­கியை யூபி­எஸ் வாங்­கு­வது பற்றி கருத்து கூறிய துணை அமைச்­சர், சிங்­கப்­பூ­ரில் இடை­யூறோ கட்­டுப்­பாடு­களோ இன்றி கிரெ­டிட் சுவிஸ் வங்கி தொடர்ந்து செயல்­படும் என்று தெரி­வித்­தார்.

கிரெ­டிட் சுவிஸ் வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­கள் தொடர்ந்து தங்­கள் கணக்­கு­களை முழு அள­வில் எட்டி வரு­வார்­கள்.

யூபி­எஸ் வங்கி கிரெ­டிட் சுவிஸ் வங்­கியை வாங்­கு­வ­தன் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் வங்கி முறை நிலைப்­பாட்­டில் தாக்­கம் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை என்­றும் துணை அமைச்சர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் வங்கி முறை மிக வலு­வாக, மீள்­தி­ற­னு­டன் திகழ்ந்து வரு­கிறது. சிங்­கப்­பூர் நாண­யச் சந்­தை­யும் அந்­நி­யச் செலா­வணி பரி­வர்த்­த­னைச் சந்தை­யும் தொடர்ந்து நல்ல முறை­யில் செயல்­பட்டு வரு­கின்றன என்­பதை அவர் சுட்­டினார்.

அமெ­ரிக்­கா­வில் அண்­மை­யில் இரண்டு வங்­கி­கள் மூடப்­பட்­டன. அது பற்றி கருத்து கூறிய துணை அமைச்­சர், அத­னால் சிங்­கப்­பூ­ரின் வங்கி முறைக்கு கணி­ச­மான பாதிப்பு எது­வும் இல்லை என்­றார்.

அதே­போல கிரெ­டிட் சுவிஸ் வங்­கி­யு­டன் கூடிய தொடர்­பு­கள் கணி­ச­மான அள­வுக்கு தங்­களுக்கு இல்லை என்று சிங்கப்­பூர் வங்­கி­கள் உறு­திப்­ப­டுத்தி இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் வங்­கி­கள் வலு­வான மூல­தன பலத்­தைக் கொண்டு இருக்­கின்­றன. கடன், இதர இடர்­க­ளால் பாதிப்­பு­கள் இராது என்­பதை அவை காலக்­கி­ரம முறைப்­படி நட­வ­டிக்­கை­களை எடுத்து உறு­திப்­ப­டுத்தி வரு­கின்­றன என்று அமைச்சர் கூறி­னார்.

உள்­ளூர் நிதி முறை­யை­யும் அனைத்­து­லக நில­வ­ரங்­க­ளை­யும் சிங்­கப்­பூர் நாணய ஆணையம் அணுக்­க­மா­கக் கவ­னித்து வரு­கிறது. சிங்­கப்­பூ­ரின் நிதி முறை தொடர்ந்து நிலை­யாக இருந்து வரு­வதை உறு­திப்­ப­டுத்த அது பணத்தை முத­லீடு செய்­ய­வும் தயா­ராக இருந்து வரு­கிறது என்­றா­ர­வர்.

செங்­காங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் இணைப் பேரா­சி­ரி­ யர் ஜேமஸ் லிம்­மிற்கு அளித்த பதி­லில், இந்த ஆண்­டின் 2வது பாதி­யில் மூலா­தார பண­வீக்­கம் மிக­வும் மெது­வ­டை­யும் என்று ஆணை­யம் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.