பிரித்தம் சிங் விளக்கம்: கொவிட்-19 காலத்தின்போது தேசிய முயற்சியை கீழறுக்காமல் ஆதரவு அளித்தது பாட்டாளிக் கட்சி

பிரித்தம் சிங் விளக்கம்: கொவிட்-19 காலத்தின்போது தேசிய முயற்சியை கீழறுக்காமல் ஆதரவு அளித்தது பாட்டாளிக் கட்சி

2 mins read
ea1bb6e7-43a5-43d3-8434-18bdaf20ac8b
-

சிங்­கப்­பூர் முன் ஒரு­போ­தும் கண்­டி­ராத கொவிட்-19 நெருக்­க­டியை அர­சாங்­கம் கையாண்ட விதத்தை பாட்­டா­ளிக் கட்சி பகி­ரங்­க­மாக குறை­கூ­ற­வில்லை.

அது, அந்த தேசிய முயற்­சி­யைக் கீழ­றுக்­கா­மல் அதற்கு ஆத­ரவு அளிக்­கவே தீர்­மா­னித்து இருந்­தது என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­கடி தொடர்­பி­லான பாட்­டா­ளிக் கட்­சி­யின் அணு­கு­மு­றையை மன்­றத்­தில் அவர் விவ­ரித்­தார்.

தொற்று காலத்­தின்­போது பாட்­டா­ளிக் கட்­சி­யின் நகர மன்­றங்­கள் தேவை­யான நிபந்­த­னை­களை அமல்­ப­டுத்­தின.

கட்சி நிர்­வா­கத்­தின் கீழ் உள்ள இடங்­களில்- அதா­வது உண­வங்­காடி நிலை­யங்­கள், வெற்றுத்த­ளங்­கள் போன்ற இடங்­களில் அமல்­ப­டுத்­தப்­பட்ட தனி­ந­பர் பாது­காப்பு இடை­வெளி நிபந்­த­னையை அறிந்து சிலர் எரிச்­ச­ல­டைந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பாது­காப்பை அல்­லது தேசிய முயற்­சி­களை விட்­டு­கொ­டுக்­கா­மல் திறந்த மன­தோ­டும் இரக்­கத்­தோ­டும் அவர்­களைக் கட்சி அணு­கி­யது என்று அவர் தெரி­வித்­தார்.

"சில விதி­மு­றை­கள் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்டபோது அவை பிரச்­சி­னை­களைக் கொடுப்­பவையாக இருந்­தன என்­பதை நாங்­கள் அறிந்­தோம்.

"எங்­கள் நகர மன்ற அதி­கா­ரி­கள் தங்­கள் கருத்­து­களை சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளி­டம் எடுத்து கூறி­னார்கள்.

"தெரி­விக்­கப்­படும் கருத்­து­களை அர­சாங்க அதி­கா­ரி­கள் முக்­கி­ய­மா­ன­தாக கரு­து­வார்­கள் என்று நாங்­கள் நினைத்­தோம்.

"ஒரே சிங்­கப்­பூ­ர­ராக பாடு­பட நாங்­கள் முயன்­றோம். எதிர்­பார்த்­திருந்ததைப் போலவே நம் அர­சு அதி­கா­ரி­களும் நாங்­கள் தெரி­வித்த கருத்­து­களைக் கவ­னத்­தில் எடுத்­துக்­கொண்­ட­னர்," என்று பிரித்தம் சிங் தெரிவித்தார்.

முன்­னாள் அர­சாங்­கச் சேவைத் தலை­வ­ரான பீட்­டர் ஹோ தலை­மை­யில் தயா­ரிக்­கப்­பட்ட 'செய­லுக்கு பிந்­தைய மறு­ப­ரி­சீ­லனை' பற்­றிய அசல் அறிக்கையை (ஏஏஆர்) நாடாளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய வேண்­டும் என்று திரு சிங் கோரிக்கை விடுத்­தார்.

வெள்ளை அறிக்கை என்­பது இரண்­டாம் நிலை ஆவ­ணம். அது அசல் அறிக்கை கண்­ட­றிந்­த­வற்­றை­யும் அது செய்த முடி­வு­க­ளை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்­டது என்­றா­ர­வர்.

மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன், கொவிட்-19 கிருமி தொற்றை சிங்­கப்­பூர் கையாண்ட விதம் பற்­றிய 'செய­லுக்கு பிந்­தைய மறு­ப­ரி­சீ­ல­னையை' நடத்து­வ­தற்­கான திட்­டம் பற்றி 2021 ஜூலை­யில் அறி­வித்­தார்.

சிங்­கப்­பூர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கையாண்­டது பற்றி ஆராய விசா­ர­ணைக் குழு ஒன்றை அமைக்­கும் திட்­டம் அர­சாங்­கத்­தி­டம் இருக்­கி­றதா என்று முன்­ன­தாக திரு சிங் கேட்­டி­ருந்­தார். இதன் தொடர்­பில் இதர பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­களும் கருத்து தெரி­வித்­த­னர்.