'கிரெடிட் சுவிஸ் வங்கியின் செயல்பாடு பாதிக்காது'

'கிரெடிட் சுவிஸ் வங்கியின் செயல்பாடு பாதிக்காது'

2 mins read
255dfa65-eb6b-405c-b6c7-93fb6a673630
-

நிதி நெருக்­க­டி­யில் சிக்­கி­யி­ருக்­கும் கிரெ­டிட் சுவிஸ் வங்­கியை யுபி­எஸ் வங்கி வாங்­கு­வ­தால் சிங்­கப்­பூர் வங்­கித் துறை­யின் நிலைத்­தன்மை எந்­த­வி­தத்­தி­லும் பாதிக்­காது.

கிரெ­டிட் சுவிஸ் வங்கி சிங்­கப்­ பூ­ரில் இடை­யூறு இல்­லா­மல் செயல்­படும். வாடிக்­கை­யா­ளர்­கள் அவ்­வங்­கி­யில் உள்ள கணக்­கு ­க­ளைத் தொடர்ந்து பயன்­ப­டுத்­த­லாம் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணைம் நேற்று தெரி­வித்­தது.

கிரெ­டிட் சுவிஸ் வங்­கி­யின் மற்ற துறை­க­ளு­ட­னான ஒப்­பந்­தங்­கள் இன்­ன­மும் நடை­மு­றை­யில் இருப்பதை சிங்­கப்­பூ­ரின் மத்­திய வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.

சுவிட்­சர்­லாந்­தின் நிதித் துறை­யில் முக்­கிய தூண்­க­ளாக விளங்­கும் இரண்டு வங்­கி­களும் சில்­லறை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை­யாற்­று­வதில்லை. தனி­யார் வங்கிக­ளாகும். சிங்­கப்­பூ­ரில் முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளா­கவும் அவ்­விரு வங்­கி­கள் செயல்­ப­டு­கின்­றன.

வங்கி நட­வ­டிக்­கை­க­ளைத் தவிர சிங்­கப்­பூ­ரில் உரி­மம் பெற்ற இதர நிதி நிறு­வ­னங்­க­ளு­டன் அது நிதி சேவை­களை வழங்­கு­கிறது. இத்­த­கைய நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய உரி­மங்­க­ளின்­கீழ் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் என்று ஆணை­யம் விளக்­கி­யது.

இருந்­தா­லும் சுவிஸ் நிதிச் சந்தை மேற்­பார்வை ஆணை­யத்­து­டன் (ஃபின்மா) தொடர்ந்து தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் கிரெ­டிட் சுவிஸ் வங்­கி­யைக் கையகப் ­ப­டுத்­து­வது குறித்து திங்­க­ளன்று அந்த ஒழுங்­கு­முறை ஆணை­யம் தெரி­வித்­த­தா­க­வும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கூறியது.

கைய­கப்­ப­டுத்துதல் அமலாக் கப்படும்போது சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், ஃபின்மா, கிரெ­டிட் சுவிஸ், யுபி­எஸ் ஆகி­யவை வேலை வாய்ப்பு உள்­ளிட்­டவை பாதிக்­காமல் முறை­யான மாற்­றத்­திற்கு ஏற்­பாடு செய்­யும்.

கிரெ­டிட் சுவிஸ் வங்கி, சிங்கப் ­பூ­ரில் சுமார் 3,500 பேரை வேலை­யில் அமர்த்­தி­யி­ருப்­ப­தாக சந்தை நில­வரங்­கள் மூலம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

2018 ஜூலை­யில் வெளி­யிட்ட ஓர் அறிக்­கை­யில் அந்த எண்­ணிக்கை 4,000ஆக இருக்­கும் என்று பிசி­னஸ் டைம்ஸ் தெரி­வித்­தி­ருந்­தது.

இதற்­கி­டையே ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்குப் பதி­ல­ளித்த கிரெ­டிட் சுவிஸ் வங்கி, வாடிக்­கை­யா­ளர் சேவை­யில் எந்­த­வித இடை­யூ­றை­யும் எதிர்­பார்க்­க­வில்லை என்று அந்த வங்கி கூறியுள்ளது.

"சுமூ­க­மான மாற்­றத்தை உறுதி செய்­வ­தில் நாங்­கள் முழு­கவ­னம் செலுத்தி வரு­கி­றோம். ஹாங்­காங்­கில் இன்­றும் நாளை­யும் நடை­பெ­ற­வி­ருக்­கும் எங்­க­ளு­டைய முத­லீட்டு மாநாடு திட்­ட­மிட்­ட­படி நடக்­கும். வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை­யாற்­றும் எங்­க­ளு­டைய நோக்­கத்­தில் மாற்ற­மி­ருக்­காது," என்று கிரெ­டிட் சுவிஸ் வங்கி மேலும் கூறி­யது.

நீண்­ட­கா­ல­மாக போட்­டி­யாக விளங்­கிய கிரெ­டிட் சுவிஸ் வங்­கியை யுபி­எஸ் வாங்­க­வி­ருப்­ப­தாக ஃபின்மா அறி­வித்­த­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.