அவசரநிலையை நேரலை மூலமாக காவல்துறைக்கு மக்கள் தெரிவிக்கலாம்

அவசரநிலையை நேரலை மூலமாக காவல்துறைக்கு மக்கள் தெரிவிக்கலாம்

2 mins read
46a6d0ad-c263-4a3e-88f1-6c0dd8a7d4ed
கைப்­பே­சி­யில் உள்ள கேமரா மூல­மாக எடுக்­கப்­பட்ட நேர­டிக் காட்­சி­க­ளைத்­தான் அனுப்­பி­வைக்க முடி­யுமே தவிர, கைப்­பே­சி­யில் உள்ள படக்­கோப்­பு­கள், செய­லி­கள், புகைப்­ப­டக் காட்­சி­ய­கம் ஆகி­ய­வற்­றில் உள்ள காணொ­ளி­களை அனுப்ப முடி­யாது என்று தெளி­வுப்­ப­டுத்­தப்­பட்­டது. படம்: பிக்ஸாபே -

ஒரு தீச் சம்­ப­வம் பற்­றியோ கொலைச் சம்­ப­வம் பற்­றியோ 999 அல்­லது 995க்கு அழைப்­போர், தங்­கள் கைப்­பே­சி­யைக் கொண்டு அந்­தச் சம்­ப­வங்­கள் பற்­றிய காட்சி­களை நேர­லை­யாக அந்த காவல்­து­றைக்கோ சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கோ அனுப்பலாம்.

சம்­ப­வத்­தைப் பொறுத்து, அவ­ச­ர­நிலை காணொளி முறைக்­கான இணைப்பை சம்­பந்­தப்­பட்ட அமைப்பு தொலை­பே­சி­யில் அழைப்­பவ­ருக்கு குறுஞ்­செய்தி மூலம் அனுப்­பும்.

அந்த இணைப்­பைப் பயன்­ப­டுத்தி, சம்­ப­வம் பற்றி நேர­டிக் காட்­சி­களை அழைப்­ப­வர் காவல்­து­றைக்கோ சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கோ அனுப்பி வைக்­க­லாம்.

சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் சிறப்பு நட­வ­டிக்கை தள­பத்­தி­ய­மும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புப் படை­யும் பயன்­ப­டுத்­தும் இந்த புதிய முறை நேற்று முதல் நடை­மு­றைக்கு வந்­தது.

கைப்­பே­சி­யில் உள்ள கேமரா மூல­மாக எடுக்­கப்­பட்ட நேர­டிக் காட்­சி­க­ளைத்­தான் அனுப்­பி­வைக்க முடி­யுமே தவிர, கைப்­பே­சி­யில் உள்ள படக்­கோப்­பு­கள், செய­லி­கள், புகைப்­ப­டக் காட்­சி­ய­கம் ஆகி­ய­வற்­றில் உள்ள காணொ­ளி­களை அனுப்ப முடி­யாது என்று தெளி­வுப்­ப­டுத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூர் காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, உள்­து­றைக் குழு­வின் அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்பு ஆகி­யவை எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­து­டன் இணைந்து இந்­தப் புதிய தக­வல் தெரி­விப்பு முறையை உரு­வாக்­கின.

2021 வரு­டாந்­திர காவல்­ துறைப் பணித்­திட்­டத்­தின்­போது அறி­விக்­கப்­பட்ட இந்த முறை இவ்­வாண்டு பிற்­ப­கு­தி­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டது.

அவ­ச­ர­நிலை அழைப்­பு­க­ளின்­போது, நட­வ­டிக்கை நிலை­யங்­களில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்கு அழைப்­ப­வர் கூறும் சம்­ப­வங்­களின் தீவி­ரம் பற்றி புரிந்­து­கொள்ள சிர­ம­மாக இருக்­கும். குறிப்­பாக, சம்­ப­வத்தின் கடுமை பற்றி அழைப்­ப­வர் கூறும் தக­வ­லைக் கொண்டு அங்கு என்ன நடக்­கிறது என்று அதி­கா­ரி­க­ளால் ஊகிக்க முடி­யாது.

நேர­லைக்­கான இணைப்பை அழைப்­ப­வ­ருக்கு அனுப்­பு­வ­தற்கு முன் அழைப்பை எடுக்­கும் அதி­காரி, காணொ­ளிக் காட்­சி­க­ளால் பயன் உள்­ளதா, காணொளி எடுப்­ப­தால் அழைப்­ப­வ­ரின் பாது­காப்­புக்­குப் பங்­கம் வந்­து­வி­டுமா என்று ஆராய்ந்த பிறகே, நேர­லைக்­கான இணைப்பு அழைப்­ப­வ­ருக்கு அனுப்பி வைக்­கப்­படும் என்று காவல்­துறை செய்­தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­தார்.

நேர­லைக்­கான இணைப்பை ஒரு­மு­றை­தான் பயன்­ப­டுத்த முடி­யும். அனுப்­பி­ய­வு­டன் அழைப்­ப­வர் இணைப்பை அழுத்­த­வில்லை என்­றால், அது சிறிது நேரத்­தில் காலா­வ­தி­யாகி விடும் என்­றும் காணொ­ளி­யில் நேர­லை­யின்­போது அழைப்­ப­வர் கைப்­பேசி அழைப்­பில் தொடர்ந்து இருக்க வேண்­டும் என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

தீச் சம்­ப­வங்­கள், சாலைப் போக்­கு­வ­ரத்து விபத்­து­கள் அல்­லது மீட்பு நட­வ­டிக்கை போன்ற சம்­ப­வங்­களில் இந்த நேர­லைக் காணொளித் தக­வல் தங்­க­ளுக்கு பெரி­தும் உத­வும் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

பெரிய அள­வி­லான அவ­ச­ர ­நி­லை­யின்­போது அனுப்­பப்­படும் நேர­டிக் காணொ­ளி­களை சிங்­கப்­பூர் காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை என இரு அமைப்­பு­களும் பயன்­ படு­த்திக்கொள்­ள­லாம்.