எஸ்பிஎச் மீடியா வருடாந்திர விருதுகள் போட்டியில் தமிழ் முரசு கட்டுரை பரிந்துரை

எஸ்பிஎச் மீடியா வருடாந்திர விருதுகள் 2022 போட்டியில் தமிழ் முரசின் செய்திக்கட்டுரை நேற்று சிறப்புக் கட்டுரையாக முன்மொழியப்பட்டது.

சிறந்த இளம் செய்தியாளர், சிறந்த செய்தியாளர், சிறந்த செய்திக்கட்டுரை என்ற மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் முரசின் செய்தியாளர்களான மோனலிசா, 30, ஹர்ஷிதா பாலாஜி, 19, எழுதிய ‘மாதக் கணக்கில் தாமதம், அலட்சியம், அலைக்கழிப்பு’ கட்டுரை சிறந்த செய்திக்கட்டுரை என்ற பிரிவில் முன்மொழியப்பட்டது.

சரக்கு ஏற்­று­மதி இறக்­கு­ம­தித் தொழில்­செய்­யும் சில நிறு வனங்­க­ளின் மீது பல புகார்­கள் அளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் இக்­கட்­டுரை வெளி­யா­னது.

சரக்கு ஏற்­று­மதி இறக்­கு­மதி நிறு­வ­னங்­க­ளின் செயல்­பா­டு­கள், மோசடி சம்­ப­வங்­கள் பற்­றிய ஆழ மான பார்­வை­யாக இக்­கட்­டுரை அமைந்­தது.

“செய்­தி­யா­ள­ரா­கப் பணி­யில் சேர்ந்த முதல் மாதத்­தி­லேயே எங்களுடைய சிறப்புக் கட்­டுரை, விரு­திற்குத் தேர்­வா­கி­யி­ருந்­தது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது.

“ஒரு மாதத்­திற்­கும் மேலாக குழுவுடன் இணைந்து பணி­யாற்றிய இக்­கட்­டு­ரை­யி­லி­ருந்து நான் பல செய்தி சேக­ரிக்­கும், எழு­தும் நுணுக்­கங்­க­ளைக் கற்றுக்கொண்­டேன்,” என்று மோன­லிசா கூறி­னார்.

“மோச­டிச் சம்­ப­வங்­களில் சம்­பந்­தப்­பட்ட இரு கடை­களும் மூடப்­பட்­ட­தற்­கான சிறு கார­ண­மாக இக்­கட்­டுரை அமைந்­த­தால் என்­னால் ஒரு செய்­தி­யா­ள­ராக ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்­கிறது,” என்று ஹர்­ஷிதா தெரிவித்தார்.

பிசி­னஸ் டைம்­ஸின் வோங் பே டிங், சிங்­கப்­பூ­ரின் சிறந்த மாண­வர்­கள் பகுப்­பாய்வு, உணவு அறி­வி­யல், சுற்­றுச்­சூ­ழல் போன்ற படிப்­பு­களை மேற்­கொள்­வதை பற்றி எழு­திய செய்­திக்­கட்­டுரை 2022ஆம் ஆண்­டின் சிறந்த செய்திக்கட்­டுரை விருதை வென்­றது.

2022ஆம் ஆண்­டின் சிறந்த இளம் செய்­தி­யா­ளர் விருதை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் இங் கெங் ஜீன்-யங்கும் சிறந்த செய்­தி­யா­ளர் விருதை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் டேன்­சன் சியோங்­கும் பெற்­ற­னர்.

அது­மட்­டு­மல்­லா­மல், தமிழ் முர­சின் மூன்று செய்­திக்­கட்­டு­ரை ­க­ளுக்கு சிறப்பு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

உக்­ரேன் நெருக்­க­டி­யின்­போது பல்­லா­யி­ரம் கிலோ­மீட்­டர் கடந்து சென்று உத­விய சிங்­கப்­பூர் இளை­யரைப் பற்றி எழு­திய விக்­னேஸ்­வரி சுப்­ர­ம­ணி­யம், செல்­லப்­பி­ரா­ணி­க­ளி­டம் அன்பு போற்­று­வோ­ரைப் பற்றி எழு­திய மாதங்கி இளங்­கோ­வன், அகத்­தின் அழகை பற்றி எழு­திய ஆ. விஷ்ணு வர்­தினி ஆகி­யோ­ருக்கு சிறப்பு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

மேலும், தமிழ் முர­சின் செய­லி­யைப் பற்­றி­யும் இதன் மூலம் சிங்­கப்­பூ­ரின் தமிழ் இளை­யர்­களை எவ்­வாறு இச்­செ­யலி ஈர்க்­கிறது என்­பதை பற்­றி­யும் விவ­ரங்­கள் அளிக்­கப்­பட்­டன.

கொவிட்-19 நோய்ப் பர­வ­லுக்குப் பிறகு ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊட­கக் குழு­மம் முதல் முறை­யாக ஒன்­று­கூ­டும் விழா­வாக இது அமைந்­தது.

செய்­தி­ய­றை­க­ளின் உழைப்­பை­யும் செய்­தி­யா­ளர்­க­ளின் சாத­னை­க­ளை­யும் அங்­கீ­க­ரிக்க இந்த விருது விழா நடத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!