40 மாடி உயரத்தில் தொங்கு மேடையில் தவித்த இருவர் மீட்பு

1 mins read
9b837253-49c8-4cdf-ab73-eacc6fa36962
-

தஞ்­சோங் பகார், கேப்­பிட்­டல் டவர் கட்­ட­டத்­தின் 40வது மாடி­யில் தொங்கு மேடை­யில் சிக்கிக் கொண்ட இரண்டு ஊழி­யர்­களை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை பாது­காப்­பாக மீட்டுள்­ளது.

நேற்று பிற்­ப­கல் 1.40 மணி­ய­ள­வில் சம்­ப­வம் பற்றி தக­வல் கிடைத்து அங்கு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை விரைந்­தது. அப்­போது தொங்கு மேடை­யில் தவித்த இரு­வ­ரை­யும் 'டார்ஃப்' எனும் பேரி­டர் உதவி, மீட்­புக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் மீட்டு 52வது மாடி­யில் உள்ள பாது­காப்­பான இடத்­துக்­குக் கொண்டு வந்த­னர்.

பிற்­ப­கல் 3.50 மணி­வாக்­கில் அப்­ப­கு­தியைச் சுற்றி வளைத்து காவல்­துறையினர் தடுப்­பு­க­ளைப் போட்­டி­ருந்தனர்.

மீட்­கப்­பட்ட ஊழி­யர்­களில் ஒரு­வர் படுக்­கை­யில் படுக்க வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

அவ­ருக்கு மருத்­துவ உதவி யாளர்கள் முத­லு­த­வி­யைச் செய்­த­னர். அவ­ரது இடது கைக்கு கட்­டுப் போடப்­பட்­டது. ஆனால் வெளியே தெரி­யும் அள­வுக்கு அவ­ருக்கு காயம் எது­வும் இல்லை. கடந்த செப்­டம்­ரில் இதே போன்று உய­ர­மான இடத்­தில் தொங்கு மேடை­யில் சிக்­கிய ஓர் ஊழி­யரை 'டார்ஃப்' குழு­வி­னர் காப்­பாற்­றி­னர்.

டெக் வை லேனில் நடந்த இந்­தச் சம்­ப­வத்­தில் வீவக புளோக்­கின் எட்­டா­வது, ஒன்­ப­தா­வது மாடிக்கு இடையே நாற்­பது மணி நேரம் ஊழி­யர் சிக்­கிக் கொண்­டார்.