உணவங்காடியில் படுத்துக் கிடந்த 56 வயது நபர் மரணம்

உணவங்காடியில் படுத்துக் கிடந்த 56 வயது நபர் மரணம்

1 mins read
d151c736-1358-4474-8c64-b8b9a4f92e9e
ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­யில் அவ­ரது மர­ணத்­தில் சூது இருக்­காது என காவல்­துறை நம்­பு­கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உண­வங்­கா­டி­யில் மேசை ஒன்றில் 12 மணி நேரத்­துக்கு மேல் படுத்­துக்கிடந்­த­வர் இறந்­து ­விட்டதாக அங்கு வந்த குடி­மைத் தற்­காப்­புப் படை அறி வித்தது. ஞாயிறு காலை 9.00 மணி­ய­ள­வில் அவர் படுத்து இருந்­ததை துப்­பு­ரவு மேற்­பார்­வை­யா­ளர் லியு ஷென் குவாங் பார்த்­தார். மாலை 8.00 மணிக்­குப் பிற­கும் அவர் எழுந்­தி­ருக்­க­வில்லை. லியு தரை­யைக் கழு­வு­ வ­தற்­காக அவரை எழுப்ப முயற்சி செய்­தார். ஆனால் அவர் அசை­வற்­றுக் கிடந்­த­தால் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­குத் தக­வல் கொடுக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே அங்கு வந்த காவல்­து­றை­யி­னர் நான்கு மணி நேரம் இறந்­த­வர் குறித்து விசா­ரணை நடத்­தி­னர். இரவு 11.00 மணி­ய­ள­வில் இறந்­த­வ­ரின் உடல் அகற்­றப்­பட்­டது. ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­யில் அவ­ரது மர­ணத்­தில் சூது இருக்­காது என காவல்­துறை நம்­பு­கிறது.