ரச்சனா வேலாயுதம்
சிங்கப்பூரில் உள்ள கலாசார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தேசிய மரபுடைமைக் கழகத்தின் முயற்சிகளில் ஒன்றான தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமை (ஐசிஎச்) அங்கீகார விருது நேற்று சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் நான்கு தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஐசிஎச் மேற்பார்வையாளர் விருது 2019ல் தொடங்கி நேற்று மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான திரு எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.
இந்த விழாவில் அங்கீகாரம் கிடைத்தவர்களின் குடும்பத்
தினர், நண்பர்கள், அமைப்பு உறுப்பினர்கள் உட்பட கிட்டதட்ட 100 பேர் கலந்துக்கொண்டனர். மரபை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து சிங்கப்பூரில் இந்தக் கலைகளை செய்துவரும் இவர்களின் அனுபவங்கள் காணொளி மூலமாக வந்தவர்களிடம் காட்டப்பட்டது.
ஆர்க்கிட் செடிகளைப் பாதுகாத்து வளர்த்து வரும் திரு சயீத் யூசோஃப் அல்சகோஃப், சிங்கப்பூர் வூஷு, கடல்நாக, சிங்க நடனச் சம்மேளனம், வாயாங் பிரனாக்கான், குனோங் சாயாங் அமைப்பு ஆகியோர் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளனர்.
இதில், கரகம் கட்டும் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டு இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்ட திரு பாலகிருஷ்ணன் வீராசாமி ராமசாமிக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
"தேசிய அளவில் கரகம் கட்டும் கலைக்கு இந்த விருது கிடைத்ததில் எனக்கு பெருமை. நான் முதன் முதலில் கரகத்தை அலங்கரிக்க தொடங்கியபோது, எனக்குள் இருந்த ஆர்வம் என்னை மேம்படுத்திக்கொள்ள தூண்டியது. அதேபோல, அடுத்த தலைமுறையையும் ஊக்குவித்து அவர்கள் சிறப்பாக இந்தக் கலையைக் கற்க நான் வழி வகுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.
"அடுத்த தலைமுறைக்கு ஒரு கலையை அவர்களுக்கு புரியும் வழியில் எடுத்துச் செல்வது நம் பொறுப்பு.
"இந்தக் கலை மீதான அதீத நாட்டத்தை சிங்கப்பூரில் தொடர்ந்து வளர்க்க வேண்டும்," என்று திரு பாலகிருஷ்ணன் தமிழ் முரசிடம் கூறினார்.
"பல்லின சமுதாயத்தில் கலாசாரத்தை மதித்து, காலத்திற்கு ஏற்ப இக்கலைகளை மற்றவர்
களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
"இக்கலைகளின் நுணுக்கங்களையும் அழகையும் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல 'அவர் எஸ்ஜி ஹெரிடேஜ் 2.0' எனும் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபடும். பல்லின கலசாரத்தைப் புதிய முறைகளில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோருக்கு இந்த விருது வழங்கப்
படுகிறது." என்று அமைச்சர் எட்வின் டோங் தன் உரையில்
கூறினார்.

