சேவை இடையூறு அதிகரித்தும் நம்பகத்தன்மையில் பாதிப்பில்லை

சேவை இடையூறு அதிகரித்தும் நம்பகத்தன்மையில் பாதிப்பில்லை

2 mins read
8f7179d8-e2a4-4c42-9b80-f32187d7f819
-

அரை மணி நேரத்­துக்­கும் அதி­க­மான எம்­ஆர்டி ரயில் சேவை இடை­யூறுச் சம்­ப­வங்­கள் 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்டு இரட்­டிப்பாகியது. இத்­த­கைய இடை­யூ­றுச் சம்­ப­வங்­கள் கடந்த ஆண்­டில் ஏழு முறை நிகழ்ந்­தன. கடந்த ஐந்து ஆண்­டு­ களில் இதுவே ஆக அதிகமான இடையூறுச் சம்பவங்கள் நிகழ்ந்த இரண்டாவது தடவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இருப்­பி­னும், ஒட்­டு­மொத்த ரயில் நம்­ப­கத்­தன்மை தொடர்ந்து உயர்­வாக இருப்­ப­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. ரயில் சேவைத் தாம­த­மும் குறைந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி, சிங்­கப்­பூ­ரின் எம்­ஆர்டி ரயில்­கள் பய­ணம் செய்த ஒவ்­வொரு 2.09 மில்­லி­யன் கிலோ மீட்­ட­ருக்கு ஐந்து நிமி­டங்­க­ளுக்­கும் அதி­க­மான ஒரு சேவை இடை­யூறு ஏற்­பட்­டது. இதன்­மூ­லம் உல­கி­லேயே அதிக நம்­ப­கத்­தன்மை வாய்ந்த ரயில் சேவை­களில் சிங்­கப்­பூ­ரின் எம்­ஆர்டி ரயில் சேவை­யும் ஒன்று. ஆகச் சிறந்த ரயில் சேவை வழங்­கிய எம்­ஆர்டி ரயில் பாதை­யாக புதிய டௌன்­ட­வுன் ரயில் பாதை திகழ்­கிறது. இந்த ரயில் பாதையை எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் நடத்­து­கிறது.

எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் நடத்­தும் வடக்கு-தெற்கு ரயில் பாதை­யில் அதிக சேவை இடை­யூறு ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. இருப்­பி­னும், வடக்கு-தெற்கு ரயில் பாதை­யில் எம்­ஆர்டி ரயில்­கள் 1.6 கிலோ­மீட்­ட­ருக்­கும் அதி­கம் பய­ணம் செய்த பிறகே ஓர் இடை­யூ­றுச் சம்­ப­வம் ஏற்­பட்­டது. ஆகப் புதிய தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு திறக்­கப்­பட்­டது. அதை எஸ்­எம்­ஆர்டி நிறுவனம் நடத்­து­கிறது. ரயில் சேவை வழங்க தொடங்­கி­ய­தி­லி­ருந்து அப்­பா­தை­யில் பல இடை­யூ­று­கள் ஏற்­பட்­டு­விட்­டன. ஆனால் அவை அறிக்­கை­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, எல்­ஆர்டி ரயில் சேவை இடை­யூ­று­கள் கடந்த ஆண்டு பாதி அளவு குறைந்­தது. கடந்த ஆண்­டில் வெறும் இரண்டு எல்­ஆர்டி சேவை இடை­யூ­று­கள் ஏற்­பட்­டன. இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் ரயில் சேவை இடை­யூ­று­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து இம்­மா­தத் தொடக்­கம் வரை தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் குறைந்­தது நான்கு சேவை இடை­யூ­றுச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

அதே கால­கட்­டத்­தில் வடக்கு-தெற்கு ரயில் பாதை­யில் மூன்று ரயில் சேவை இடை­யூ­றுச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

கடந்த நான்கு மாதங்­களில் தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் ஐந்து சேவை இடை­யூ­று­கள் ஏற்­பட்­ட­தாக ராடின் மாஸ் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மெல்­வின் யோங் நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அவற்­றில் இரண்டு மென்­பொ­ருள் தொடர்­பான பிரச்­சி­னை­

க­ளால் ஏற்­பட்­ட­தாக அவர் கூறி­னார். அவற்­றுக்­குத் தீர்வு காணப்­பட்­டு­விட்­ட­தாக திரு யோங் தெரி­வித்­தார். ஏனைய இடை­யூ­று­கள் குறை­பா­டு­கள் உள்ள பாகங்­க­ளால் ஏற்­பட்­ட­தா­க­வும் அவை மாற்­றப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.