ஆசிய பசிபிக்கில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு முக்கியமான காலகட்டம்

1 mins read
4650b609-f306-433e-9898-be88a60035c3
-

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்­புக்கு தற்­போது முக்­கிய கால­கட்­ட­மாக இருப்­ப­தாக சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் தலை­வர் ஹான் கோக் ஜுவான் நேற்று தெரி­வித்­தார். கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்­குப் பிறகு ஆசிய பசி­பிக் நாடு­களில் விமா­னப் போக்­கு­

வ­ரத்து மீண்­டும் முழு­வீச்­சு­டன் இயங்க இருப்­ப­தால் பாது­காப்­பில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் விமா­னப் பய­ணங்­கள் பெரு­ம­ள­வில் அதிகரித்துள்ளன. இதன் விளை­வாக அதைச் சமா­ளிக்க முடி­யா­மல் பல விமான நிலை­யங்­கள், விமா­னச் சேவை­கள் சிர­மப்­ப­டு­வ­தாக திரு ஹான் கூறி­னார். கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு இருந்த நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்டி ­லி­ருந்து 100 விழுக்­காட்டு வரை­யி­லான விமா­னப் போக்­கு­

வ­ரத்தை ஆசிய நாடு­கள் பதிவு செய்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். அடுத்த ஓராண்டு அல்­லது இரண்டு ஆண்­டு­களில் முன்பு இருந்த நிலைக்கு ஆசிய நாடு

­க­ளின் விமா­னப் போக்­கு­வ­ரத்து முழு­மை­யா­கத் திரும்­பி­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார். எனவே, வருங்­கா­லங்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­களை எதிர்­கொள்ள ஆசிய பசி­பிக் நாடு­கள் ஒன்­றி­ணை­வது மிக­வும் முக்­கி­யம் என்­றும் பிற­ருக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளி

­லி­ருந்து கற்­றுக்­கொண்டு அதே மாதி­ரி­யான சம்­ப­வங்­கள் நிக­ழா­தி­ருக்க தகுந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் திரு ஹான் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், முதல்­மு­றை­யாக நடத்­தப்­படும் ஆசிய பசி­பிக் விமா­னப் போக்­கு­வ­ரத்து உச்­ச­நிலை மாநாடு இன்று முதல் சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­று­கிறது.