சமூகப் பணித்துறைக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சமூகப் பணித்துறைக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
9051e093-1f22-4fac-a87b-7f12c064f524
-

கரு­ணா­நிதி துர்கா

சமூக பணி­யா­ளர் தினம் ஆண்டு ­தோ­றும் மார்ச் 21ஆம் தேதி­யன்று அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பின் சமூக பணி­யா­ளர்­

க­ளுக்­கான தொழில் மாற்றுத் திட்­டத்­தின் மூலம் பலர் வெற்­றி­க­ர­மாக தங்­க­ளது வேலைத்

­து­றையை மாற்­றி­யுள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட 80 தனி­ந­பர்­கள் மற்ற துறை­யி­லி­ருந்து சமூக பணித்­து­றைக்கு வேலை மாற்­றம் செய்­துள்­ள­னர்.

நோய் பர­வ­லுக்கு முந்­தைய காலத்தை விட 2020 முதல் 2022 வரை­யி­லான காலத்­தில் கூடு­தல் பேர் இவ்­வா­றான வேலைத்­துறை மாற்­றத்தை மேற்­கொண்­டுள்­ள­னர். சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தில் சமூ­கப் பணி­யா­ள­ராக இருக்­கும் பிரேம் முனி­யாண்டி, 37, 2010ல் ஆப்­டோ­மெட்ரி எனும் அறி­வி­யல் சாத­னங்­கள் கொண்டு கண்­க­ளைச் சோதனை செய்­தல் துறை­யில் பட்­ட­யம் பெற்று ஏழு ஆண்­டு­கள் கண் மருத்­துவ உத­வி­யா­ள­ரா­க­வும் அதன் பின்­னர் ஜூன் 2020 வரை அந்­நிய செலா­வணி வர்த்­த­க­ரா­க­வும் பணி­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூர் விலங்கு வதை தடுப்­புச் சங்­கத்­தில் தொண்­டூ­ழி­ய­ராக இருந்­த­போது பயனுள்ள எதி­லா­வது ஈடு­பட வேண்­டும் என்ற உணர்வு பிரே­முக்கு வந்­தது. அன்பை தன் வாழ்க்­கை­யின் முக்­கிய விழு­மி­ய­மாக கொண்ட பிரேம், சமூ­கப் பணி­யா­ள­ராக வேண்­டும் என்ற ஆர்­வம் கொண்­டார்.

சமூ­கப் பணித்­து­றை­யில் வேலை தேடி கொண்­டி­ருந்­த­போது சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பின் சமூ­கப் பணி­யா­ளர்

­க­ளுக்­கான தொழில் மாற்றுத் திட்­டத்­திற்குப் பதிவு செய்­தார்.

இத்­து­றை­யைப் பற்றி எவ்­விதத் தக­வ­லும் தெரி­யா­த­தால் வேலையை மாற்­றும் தனது முடி­வில் பிரேம் உறு­தி­யாக இல்லை.

இத்­திட்­டத்­தின் மூலம் இவ­ரால் இத்­து­றை­யில் சிறந்து விளங்­கு­வ­தற்கு தேவை­யான திறன்­களை வளர்த்­து­கொள்ள முடிந்­த­தோடு சிண்­டா­வில் சமூக பணி­யா­ள­ராக அனு­ப­வ­மும் பெற முடிந்­தது.

சிண்­டா­வில் மூத்த துணை சமூ­கப் பணி­யா­ள­ராக உள்ள பர­மேஸ்­வரி தண்­டா­யு­த­பாணி, 37, 2010ஆம் ஆண்டு முதல் சட்­டத்­து­றை­யில் சட்ட ஆலோ­ச­க­ரா­க­வும் சட்ட பேரா­சி­ரி­ய­ரா­க­வும் பணி­பு­ரிந்­துள்­ளார்.

தனது 5ஆம் வய­தி­லி­ருந்து சத்ய சாய் அமைப்­பின் மூலம் தொண்­டு­ழி­யப் பணி­களில் ஈடு­பட்­ட­தால் பிற­ருக்கு சேவை ஆற்­று­வ­தில் ஆர்­வம் கொண்­டார் பர­மேஸ்­வரி. புதிய வாய்ப்­பு­களை ஆராய்ந்து, பிற­ருக்கு உதவி, மனித மனப்­பான்­மை­யைப் பற்றி கற்­றுக்­கொள்ள எண்­ணிய பர­மேஸ்­வரி, 2018ல் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பின் சமூ­கப் பணி­யா­ளர்­க­ளுக்­கான தொழில் மாற்றுத் திட்­டத்­திற்கு பதிவு செய்­தார். வேலை பயிற்­சி­யும் வகுப்­பறை பாடங்­களும் அடங்­கிய இத்­திட்­டம் இவ­ருக்கு மிக­வும் பய­னுள்­ள­தாக அமைந்­தது.

சிண்­டா­வில் சேர்ந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின்­னர் சமூ­கத்­திற்கு உதவ வேண்­டும் என்ற இவ­ரது ஆர்­வம் மேன்­மே­லும் வளர்ந்­துள்­ளது.

இவ்­வாறு சமூக பணித்­து­றைக்கு மாறு­வ­தற்­கான ஆத­ரவு இது­போன்ற திட்­டங்­க­ளின் மூலம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.