பள்ளிப் பேருந்துக் கட்டணம் 10 விழுக்காடு கூடியது

கல்வி அமைச்­சின்கீழ் செயல்­படும் பெரும்­பா­லான பள்­ளி­களில் பள்­ளிப் பேருந்­துக் கட்­ட­ணம் இவ்­வாண்டு 10 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. சிறப்­புக் கல்­விப் பள்­ளி­களில், அப்­ப­ணி­யைச் செய்­வ­தற்கு ஏற்ற பேருந்து நடத்­து­நர்­கள் குறை­வாக இருப்­ப­தால் அவற்­றில் பேருந்­துக் கட்­ட­ணம் கூடு­த­லாக உயர்ந்­துள்­ளது.

பேருந்­துக் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டதை அடுத்து, பள்­ளிப் பேருந்­துக் கட்­டண மானி­யத்­தைக் கல்வி அமைச்சு அதி­க­ரித்­துள்­ளது. மாத­ரந்­தி­ரப் பேருந்­துக் கட்­ட­ணத்­தில் 60 விழுக்­கா­டாக இருந்த அந்த மானி­யம், 65 விழுக்­காட்­டுக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. குடும்­பங்­க­ளுக்­குக் கூடு­தல் உதவி தேவைப்­படும் பட்­சத்­தில், பேருந்­துக் கட்­ட­ணத்­தைச் செலுத்த பள்­ளி­கள் மேலும் நிதி உதவி வழங்­க­லாம்.

தகு­தி­பெ­றும் மாண­வர்­கள், எஸ்ஜி எனே­பல் எனப்­படும் உடற்குறையுள்­ளோ­ருக்­கான நல்­வாழ்வு நிலை­யம் வழங்­கும் நல்­வாழ்­வுப் போக்­கு­வ­ரத்து மானி­யத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். அந்த அமைப்பு தனது மானி­யத் தொகையை 2022 ஜூலை­யில் உயர்த்­தி­யது. அத்­து­டன், வசதி குறைந்த மாண­வர்­ க­ளுக்கு சிறப்­புப் பள்­ளி­கள் தாங்­களே முடிவு செய்து கூடு­தல் நிதி உதவி வழங்­க­லாம்.

அதேபோல கல்வி அமைச்­சும், சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் தேவைப்­பட்­டால் தங்­க­ளின் நிதி உத­வியை உயர்த்­தும் என்று கல்வி, மனி­த­வ­ளத் துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று கூறி­னார். அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோன் பெரே­ரா­வின் கேள்­வி­க­ளுக்கு அவர் மன்­றத்­தில் பதில் அளித்­தார்.

பள்­ளிப் பேருந்­துச் சேவை­ களுக்­கான தேவை ஓர­ளவு நிலை­யாக உள்­ளது என்­றார் திரு­வாட்டி கான். ஆனால் சில பள்­ளிப் பேருந்­துச் சேவை நடத்­து­நர்­கள் தாங்­கள் எதிர்­நோக்­கும் சவால்­கள் பற்றி கல்வி அமைச்­சி­டம் கருத்­து­ரைத்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். பேருந்து ஓட்­டு­நர்­கள் பற்­றாக்­குறை, எரி­வா­யுக் கட்­டண உயர்வு போன்ற சவால்­க­ளால் பேருந்­துக் கட்­ட­ணத்தை உயர்த்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

பள்­ளிப் பேருந்து ஓட்­டு­நர்­களில் பலர் மூப்­ப­டைந்து வரு­ வ­தை­யும் அவர்­களில் பலர் தனி உரி­மை­யா­ளராக அச்­சே­வை­களை நடத்தி வரு­வ­தை­யும் திரு­வாட்டி கான் ஒப்புக்­கொண்­டார்.

நீண்­ட­கால நோக்­கில் மாண­வர்­க­ளுக்கு உத­வும் வழி­கள் பற்றி கல்வி அமைச்சு மற்ற அமைப்­பு­க­ளு­டன் ஆலோ­சித்து வரு­வ­தாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!