கிரெடிட் சுவிஸ் வங்கி விவகாரம்: வேலைகள் மீதான பாதிப்பை சமாளிக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் முனைப்பு

கிரெடிட் சுவிஸ் வங்கி விவகாரம்: வேலைகள் மீதான பாதிப்பை சமாளிக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் முனைப்பு

1 mins read
13f62c49-f59b-4296-b53b-1410d37d7fd1
-

கிரெ­டிட் சுவிஸ், யுபி­எஸ் ஆகிய சுவிஸ் வங்­கி­க­ளின் இணைப்­பால் வேலை­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பைச் சமா­ளிக்க தானே முனைப்­பு­டன் வங்கி, நிதிக் கழ­கத்­து­டன் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கூறி­யுள்­ளது.

கிரெ­டிட் சுவிஸ் வங்­கியை யுபி­எஸ் வங்கி வாங்­கு­வ­தன் தொடர்­பி­லான வேலை­கள் இன்­ன­மும் நடை­பெற்று வரு­வதை ஆணை­யம் நேற்று சுட்­டி­யது.

"சிங்­கப்­பூ­ரில் கிரெ­டிட் சுவிஸ் வங்­கி­யில் வேலை செய்­வோர் மீதான தாக்­கம் பற்றி இப்­போ­தைக்­குத் தெளி­வா­க­வில்லை.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் இதை அணுக்­க­மா­கக் கவ­னித்து வரு­கிறது. இரு வங்­கி­க­ளு­ட­னும் நெருங்­கிய தொடர்­பில் உள்­ளது," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதில் அளித்த ஆணை­யம் கூறி­யது.

கிரெ­டிட் சுவிஸ் வங்­கி­யில் சிங்­கப்­பூ­ரில் எவ்­வ­ளவு பேர் பணி­யாற்­று­கின்­ற­னர் என்­பதை ஆணை­ய­மும் இரண்டு வங்­கி­களும் தெரி­விக்­க­வில்லை.

ஆனால் அந்த வங்­கி­யில் இங்கு சுமார் 3,500 ஊழி­யர்­கள் பணி­யாற்­றக்­கூ­டும் என்று தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தன.

தி பிஸ்­னஸ் டைம்ஸ் 2018இல் வெளி­யிட்ட செய்­தி­யில் ஏறத்­தாழ 4,000 பேர் இங்­குள்ள அவ்­வங்­கி­யில் பணி­யாற்­ற­லாம் என்று தெரி­வித்­தி­ருந்­தது.

இவ்­வாண்டு பிப்­ர­வரி நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் கிரெ­டிட் சுவிஸ் வங்­கிக்கு மொத்­தம் 38 பில்­லி­யன் வெள்ளி சொத்து இருந்­தது. இத்தொகை சிங்­கப்­பூர் வங்­கித் துறை­யின் ஒட்­டு­மொத்த சொத்து மதிப்­பில் 1.6 விழுக்­காடு ஆகும்.