இளையர்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்: அதிபர் ஹலிமா வலியுறுத்து

இளையர்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்: அதிபர் ஹலிமா வலியுறுத்து

2 mins read
9e003271-d3f7-408d-932a-f569e6212c06
-

சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தங்களுக்கு இடை­யி­லான உறவு­களை வளர்க்க தத்­தம் நாடுகளைச் சேர்ந்த இளை­யர்­க­ளுக்­கான வாய்ப்­பு­க­ளைப் பெருக்க வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இளை­யர்­களே நாட்­டின் எதிர்­கா­லத் தலை­வர்­கள் என்று அதி­பர் ஹலிமா குறிப்­பிட்­டார். இரு நாடு­க­ளின் வளர்ச்­சிக்­கும் நன்­மைக்­கும் இரு­த­ரப்பு உறவு முக்­கி­ய­மா­னது என்­ப­தில் அவர்­கள் உறு­தி­யான நம்­பிக்கை கொள்ள வேண்­டும் என்று அவர் வலி­யுறுத்­தி­னார்.

சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே தற்­போது அணுக்­க­மான உறவு நில­வு­கிறது என்று திரு­வாட்டி ஹலிமா சொன்­னார்.

இப்­போ­தைய தலை­மு­றைத் தலை­வர்­கள், பொரு­ளி­யல், சமூக ரீதி­யில் ஒன்­றை­யொன்று சார்ந்து இருக்க வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை ஒன்­றா­கக் கற்­றுக்­கொண்­ட­னர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"ஆனால் நமது அனு­ப­வங்­கள் நம் இளை­யர்­க­ளுக்­குப் பொருத்­த­மா­ன­தாக இல்­லா­மல் போக­லாம். அதனால், அவ்­வ­னு­ப­வங்­க­ளைப் பெறும் வகை­யில் இளை­யர்­களுக்கு வாய்ப்­பு­க­ளை­யும் தளங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தித்தர வேண்­டி­யது அவ­சி­யம்," என்று அதிபர் ஹலிமா கூறி­னார்.

மூன்று நாள் அதி­கா­ரத்­துவ மலே­சி­யப் பய­ணத்­தின் நிறை­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

இளை­யர்­க­ளின் சிந்­தனை மூத்த தலை­மு­றை­யி­ன­ரி­ட­மி­ருந்து மாறு­பட்­டி­ருக்­க­லாம் என்ற அதி­பர், இரு­நாட்டு இளை­யர்­க­ளுக்­கும் இடை­யி­லான உற­வு­க­ளை­யும் கொண்டு ஒரு வலு­வான ஆதரவுக் கலா­சா­ரத்­தை­யும் புரிந்­து­ணர்­வை­யும் வளர்க்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

ஆசி­யான் நாடு­கள் ஒன்­றுக்­கொன்று இணைந்து செய­ல்பட்டு, வலு­வான பொரு­ளி­யல் பங்­காளி­க­ளா­கத் திகழ முடி­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வேந்­த­ரு­மான அதி­பர் ஹலிமா நேற்று காலை பேராக் மன்­ன­ரும் மலாயா பல்­க­லைக்­ க­ழக வேந்­த­ரு­மான நஸ்­ரின் ஷாவைச் சந்­தித்­துப் பேசி­னார்.

சிங்­கப்­பூர்-மலே­சியா இடை­ யி­லான சிறப்­பான உற­வை­யும் இரு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கும் இடை­யி­லான அணுக்­க­மான ஒத்­து­ழைப்­பை­யும் திரு­வாட்டி ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யாக மறு­வு­று­திப்­ப­டுத்­தி­யுள்­ளார்.