கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் லக்கி பிளாசா கடைத்தொகுதியில் சண்டை மூண்டது. அதைத் தொடர்ந்து 31லிருந்து 52 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் ஈடுபட்ட சண்டை ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. ஆண்கள் 31லிருந்து 63 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பெண்கள் 41லிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இரண்டு பெண்களும் இரு ஆண்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது நால்வரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

