கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் புதிய உச்சம்

கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் புதிய உச்சம்

1 mins read
d88d2960-8b67-4a10-ae74-aaa91b9b4361
-

கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) கட்டணம் இது­வரை இல்­லாத உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

நேற்று இடம்­பெற்ற ஏலக்­குத்­த­கை­யில் 1,600சிசி வரை­யி­லான கொள்­ள­வைக் கொண்ட கார்­களுக்­கும் 110 கிலோ­வாட் வரை ஆற்­றல் கொண்ட மின்­கார்­க­ளுக்­கு­மான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் கட்­ட­ணம் 93,503 வெள்­ளிக்கு உயர்ந்­தது. இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு இடம்­பெற்ற ஏலக்­குத்­த­கை­யில் இவ்­வகை கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் 88,000 வெள்­ளி­யாக இருந்­தது.

பெரிய வகை கார்­க­ளுக்­கும் அதிக ஆற்­றல் கொண்ட மின்­கார்­க­ளுக்­கு­மான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் 116,201 வெள்­ளி­யாக உயர்ந்­தது. வேன், டிரக், லாரி­களை உள்­ள­டக்­கும் வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான கட்­ட­ணம் முந்­திய ஏலக்­குத்­த­கை­யில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் 6.27 விழுக்­காடு குறைந்து, 85,389 வெள்­ளி­யில் முடிந்­தது.

அது­போல மோட்­டார் சைக்­கிள்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ண­மும் நேற்­றைய ஏலக்­குத்­த­கை­யில் குறைந்தது. கடந்­த­முறை 12,390 வெள்­ளி­யாக இருந்த அத்­தொகை, நேற்று 12,001 வெள்­ளிக்­குக் குறைந்­தது.

பொதுப் போக்­கு­வ­ரத்து வாக­னங்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் சற்றே கூடி­யது. இரு­வா­ரங்­க­ளுக்­கு­முன் நடந்த ஏலக்­குத்­த­கை­யில் 116,000 வெள்­ளி­யாக இருந்த அக்­கட்­ட­ணம், நேற்று 20 வெள்ளி கூடி, 116,020 வெள்­ளி­யா­னது.