இறுதிச் சடங்கு நடைபெறும் பகுதிக்கு அருகே அலறியதுடன் உணவுக் கடைத்தொகுதியில் பொதுமக்களைக் கட்டிப்பிடிக்க முயன்றது உள்ளிட்ட செயல்களைப் புரிந்ததாக ஒரு பெண் சந்தேகிக்கப்படுகிறார்.
46 வயது கோ மெய் சி எனும் அப்பெண்மீது பொதுமக்களுக்குத் தொந்தரவாக இருந்ததன் தொடர்பில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டது, கவனமின்றி நடந்துகொண்டதால் பிறருக்குக் காயம் ஏற்படுத்தியது ஆகியவற்றின் தொடர்பில் அவர்மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
பையனியர் கடைத்தொகுதி, கெக் போ கடைத்தொகுதி, பூன் லே டிரைவ் ஆகிய இடங்களில் சென்ற ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் கோ மெய் சி குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

