வணிக நிறுவனங்களுடன் ராணுவத்தின் இணைந்த பணி

வணிக நிறுவனங்களுடன் ராணுவத்தின் இணைந்த பணி

2 mins read
85a66247-0bf7-404b-ac43-6a41b65b3036
வேக­மான, நம்­ப­க­மான போர்க்­க­ளத் தக­வல்­தொ­டர்­புக்­கான ஐந்­தாம் தலை­மு­றைத் தொழில்­நுட்­பம், குறைந்த பூமி சுற்­றுப்­பாதை செயற்­கைக்­கோள்­க­ளின் துறை­கள் போன்­ற­வற்றை நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் உதா­ர­ணங்­க­ளா­கச் சுட்­டி­னார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அதி­ந­வீன தக­வல் தொழில்­நுட்ப மேம்­பா­டு­க­ளுக்­கும் அர­சாங்க ஆத­ரவு பெற்ற ஆய்வுகளுக்கும் இடையே உள்ள நீண்டநாள் தொடர்பு காணா­மல்­போ­கும் தரு­ணம் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கிறது.

பெரும்­பா­லான வளர்ந்த நாடு­களில் வணிக நிறு­வ­னங்­க­ளின் ஆய்வு, மேம்­பாட்­டுப் பணி­கள் பொதுத் துறை­யின் ஆய்வு, மேம்­பாட்­டுப் பணி­க­ளைப் பின்­னுக்­குத் தள்­ளி­விட்­டுள்­ளன என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

அதன் கார­ண­மா­கத்­தான் அர­சாங்­கங்­களும் அதன் ராணு­வங்­களும் ஒட்­டு­மொத்த பாது­காப்­புக்­குப் பங்­க­ளிக்­கும் புதிய தொழில்­நுட்­பங்­களை ஒதுக்­கித் தள்­ளா­மல் அவற்றை உரு­வாக்­கும் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­பட ஆர்­வம் காட்டி வரு­கின்­றன. இதை நேற்று ஷங்­ரிலா ஹோட்­ட­லில் நடை­பெற்ற நான்­கா­வது சிங்­கப்­பூர் தற்­காப்பு தொழில்­நுட்ப உச்­ச­நி­லைக் கூட்­டத்­திற்கு வந்­துள்ள பேரா­ளர்­கள் முன்­னி­லை­யில் உரை­யாற்­றும்­போது திரு வோங் குறிப்­பிட்­டார்.

தற்­காப்பு அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்­பால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­தக் கூட்­டம் கடந்த புதன்­கி­ழமை தொடங்கி இன்­று­டன் முடி­வ­டை­கிறது.

தற்­காப்பு, பாது­காப்புச் சூழலில் தற்­போது எழுந்­துள்ள தொழில்­நுட்ப சவால்­கள், பிரச்­சி­னை­கள் பற்றி விவா­திக்க உல­கெங்­கி­லும் உள்ள தொழில்­நுட்­பத் தலை­வர்­கள் இங்கு கூடி­யுள்­ள­னர்.

வணிக நிறு­வ­னங்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய கண்­டு­பி­டிப்­பு­களும் பங்­க­ளிப்­பு­களும் பாரம்­ப­ரி­ய­மாக இருந்து வந்­துள்ள தற்­காப்பு தீர்­வு­க­ளை­விட சிறந்­த­தாக இருக்­கின்­றன.

வேக­மான, நம்­ப­க­மான போர்க்­க­ளத் தக­வல்­தொ­டர்­புக்­கான ஐந்­தாம் தலை­மு­றைத் தொழில்­நுட்­பம், குறைந்த பூமி சுற்­றுப்­பாதை செயற்­கைக்­கோள்­க­ளின் துறை­கள் போன்­ற­வற்றை நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் உதா­ர­ணங்­க­ளா­கச் சுட்­டி­னார்.

"ராணு­வங்­கள் தங்­களின் பெர­ரிய அள­வி­லான தர­வு­க­ளைப் பாது­காப்­பாக சேமித்து வைக்க, வணிக கிள­வுட் கணினி உள்­கட்­ட­மைப்­பை­யும் பயன்­ப­டுத்­த­லாம்.மாறி­வ­ரும் சூழ்­நி­லை­க­ளைக் கருத்­தில்கொண்டு இஸ்­‌ரே­லிய தற்­காப்­புப் படை தனது தர­வு­களை தனது சொந்த தனி­யார் கிள­வுட் முறை­யி­லி­ருந்து அமேசோன் இணைய சேவை­கள், கூகல் ஆகி­ய­வற்­றின் கிள­வுட் முறைக்கு மாற்­றி­விட்­டுள்­ளது," என்­றும் துணைப் பிர­த­மர் விவ­ரித்­தார்.

மின்­னி­லக்­கத் தளங்­க­ளைத் தவிர, வணிக தொழில்­நுட்­பங்­கள் ராணு­வப் படை­யின் பலத்­தைப் பெருக்­கு­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க பங்கை ஆற்­ற­மு­டி­யும் என்று திரு வோங் குறிப்பிட்டார். பொழு­து­போக்­குக்­காக வான்­வழி புகைப்­ப­டம் எடுக்க பயன்­ப­டுத்­தப்­படும் ஆளில்லா வானூர்­தியை உக்­ரே­னிய ராணு­வம் மாற்­றி­ய­மைத்து அதில் வெடி­குண்­டு­களைப் பொருத்தி, அவற்­றைக் கொண்டு ரஷ்­யா­வின் கவச வாகனங்களைத் தாக்­கி­யதை எடுத்­துக்­காட்­டாக சொன்­னார்.

இவை­யெல்­லாம், குடி­மைத் தொழில்நுட்பத்துக்கும் ராணுவத் தொழில்நுட்பத்துக்கும் இருக்கும் இடைவெளியை அழித்­துக்­கொண்­டி­ருக்­கிறது. இன்று அவை இரண்­டும் விரி­வாக்­கம் பெற்று இரண்டு தரப்­புக்­கும் ஏற்ற தொழில்­நுட்­ப­மாக மாறி­விட்­டது," என்­றார் திரு வோங்.

"இந்த உண்மை நிலைக்­குத் தங்­களை மாற்­றிக்­கொள்ள சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் புதிய தொழில்­நுட்­பங்­களை தங்­கள் தேவைக்கு ஏற்­ற­வாறு மாற்­றி­கொள்ள வேண்­டும்.இது அர­சாங்­கங்­க­ளுக்­குப் புதி­யது அல்ல. அனைத்­து­லக தரத்­தி­லான தொழில்­நுட்­பங்­களை அர­சாங்­கங்­கள் கூட்­டா­கத் தயா­ரித்­துள்­ளன. அப்­போ­து­தான் ராணு­வப் பயன்­பாட்­டுக்கு மட்­டும் உப­யோ­க­மாகும் அணு தொழில்­நுட்­பம், குடிமை எரி­சக்தி ஆலை­க­ளுக்­கும் பயன்­ த­ரும்."

"இந்­தத் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யின் பொறுப்பை வணிக நிறு­வ­னங்­க­ளி­டம் மட்­டும் விட்­டு­விட முடி­யாது. அர­சாங்­கங்­கள், நிறு­வ­னங்­கள், குடி­மைச் சங்­கங்­கள் என அனைத்­துத் தரப்­பு­களும் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும்," என்று துணைப் பிர­த­மர் வோங் தெரி­வித்­தார்.