நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் முயற்சி

நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் முயற்சி

3 mins read
137bf052-ad37-4917-a4c9-5db564a50d83
-

ரச்­சனா வேலா­யு­தம்

மின்­னி­லக்க மய­மாக்­கல், தொழில்­நுட்­பம், பன்­மு­கத்­தன்மை போன்ற ஆசி­யாவை மேம்­ப­டுத்­தும் முக்­கிய கருப் பொருள்­க­ளைப் பற்றி கலந்து பேச பல­த­ரப்­பட்ட துறை­களை சேர்ந்த வல்­லு­நர்­களை இம்மாதம் 16ஆம் தேதியன்று டிசி­எஸ் ஏசியா டய­லாக்ஸ் என்ற கலந்­து­ரை­யா­ட­லில் ஒன்­றி­ணைத்­தது டிசி­எஸ் ஆலோ­சனை சேவை­கள், ஸ்பீக்­இன் நிறு­வ­னம்.

இக்­க­லந்­து­ரை­யா­டல் டிசி­எஸ் ஆலோ­சனை சேவை­கள் நிறு­வ­னத்­தின் முதல் முயற்­சி­யா­கும். சிங்­கப்­பூர் கிரிக்­கெட் கிளப்­பில் மாலை 6 மணிக்கு தொடங்­கிய இந்தக் கலந்­து­ரை­யா­ட­லில் பொறி­யி­யல், நிலம், மனி­த­வ­ளம், தொழில்­நுட்­பம் போன்ற பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த 60க்கும் மேற்­பட்ட தொழில்­துறைத் தலை­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

'நிலை­தன்மை பேணும் நாட்­டில் மீள் திறன் வளர்த்­தல்' என்ற தலைப்­பில் நடந்த இந்தக் கலந்­து­ரை­யா­ட­லில் சிறப்பு விருந்­தி­ன­ராக 'நுர்' முத­லீட்டு நிறு­வ­னத்தின் நிர்வாக இயக்குநரான முன்­னாள் நாடாளு­மன்ற நாய­கர் திரு சந்­திர தாஸ் கலந்­து­கொண்­டார். திரு சந்திரதாஸ் தமிழ் முர­சின் முன்­னாள் நிர்­வாக தலை­வ­ரா­க­வும் பணி­யாற்­றி­யுள்ளார்.

சிங்­கப்­பூ­ரில் ஆரம்­பித்து பல நாடு­க­ளுக்கு இந்த கலந்­து­ரை­யா­டலை கொண்டு செல்ல இந்த நிறு­வ­னம் விரும்­பு­கிறது என்று டிசி­எஸ் ஆசிய பசி­பிக் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் திரு கிரிஷ் ராமச்­சந்­தி­ரன் தனது உரை­யில் குறிப்­பிட்­டார். மலே­சியா, தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா போன்ற நாடு­களில் இந்தக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­படும் என்று அவர் கூறி­னார்.

ஃபேரர் பார்க் மருத்­து­வ­மனையின் தலைமை நிர்­வாக அதி­காரி டாக்­டர் திமத்தி லோ, எஸ்டி இஞ்ஜினி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் நீடித்த நிலைத்­தன்மை அதி­காரி சேரல் சான், புரோ­பர்டிகுரு (Propertyguru) நிறு­

வ­னத்­தின் நிர்­வாகி ஸ்டீவ் மெல்­ஹீஷ், சிங்கப்பூர் ஊழியரணியின் துணைத் தலைமை நிர்­வாக அதி­காரி ஜூலியா இங், சிங்­கப்­பூர் பல்­க­லை­க்க­ழ­கத்தைச் சேர்ந்த முனை­வர் ஸ்டீ­வன் மில்­லர் ஆகி­யோர் இந்தக் கலந்­

து­ரை­யா­ட­லில் கலந்­துக்­கொண்­ட­னர். வெவ்­வேறு துறை­களை சேர்ந்த இவர்­க­ளின் அனு­ப­வங்­களைப் பகிர்ந்­த­தோடு, பன்­மு­கத்­தன்மையை வளர்க்க அவர்­

க­ளின் துறை­கள் கொண்­டு­வ­ரும் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடினர்.

தொழில்­நுட்ப வளர்ச்­சிக்கு ஏற்ப நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்­டும் என்ற முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தி, இத­னால் நாம் எப்­படி பன்­மு­கத்­தன்­மையை ஒரு துறைக்கு கொண்டு வர­லாம் என்ற ஆலோ­ச­னை­களும் திரட்­டப்­பட்­டன.

"தொழில்­நுட்­பம் உல­கில் உள்ள பல பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு என்று எங்­கள் நிறு­வ­னம் நம்­பு­வ­தால் பாகு­பாடு பார்க்­கா­மல் அதை எல்­லோ­ருக்­கும் கொண்டு செல்ல விருப்­பப்­ப­டு­கி­றோம். சமு­தா­யத்­தில் இருக்­கும் பிரச்­சி­னை­களைப் பற்றி விவா­தித்து தீர்வு காண இதுபோன்ற கலந்­து­ரை­யா­டல்­கள் ஒரு நல்ல வாய்ப்­பாக அமை­யும்," என்று திரு கிரிஷ் ராமச்­சந்­தி­ரன் தமிழ்­ மு­ர­சி­டம் பகிர்ந்துகொண்­டார்.

இதில், ஒரு சமு­தா­ய­மாக முன்­னேற தொழில்­நுட்­பம் கண்­டிப்­பாக உத­வும் என்று ஆசி­யான் நிறு­வன விவ­கா­ரங்­க­ளின் தலை­வ­ரான திரு முஹம்­மது இர்­ஷாத் பகிர்ந்துகொண்­டார்.

"ஸ்டெம்' எனப்­படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் திறன்களை வசதி குறைந்­த­வர்­க­ளுக்கு சொல்­லிக் கொடுக்க பல முயற்­சி­களும் நடப்­பில் உள்­ளன. சமு­தா­யத்­தில் பின்தங்­கி­ய­வர்­க­ளுக்கு இது போன்ற வாய்ப்­பு­களை அளிப்­ப­தால் நீடித்த நிலைத்தன்­மையை அடைய முடி­யும் என்ற நம்­பு­

கி­றோம்" என்று திரு இர்­ஷாத் கூறி­னார்.