பாடத் தரவரிசை: என்யுஎஸ், என்டியு மீண்டும் உச்சம்

பாடத் தரவரிசை: என்யுஎஸ், என்டியு மீண்டும் உச்சம்

1 mins read
4bf1462a-a5f8-457c-b928-7309c3dd26d0
-

பாடங்­கள் அடிப்­ப­டை­யி­லான உல­க­ளா­வி­யத் தர­வ­ரி­சை­யில் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­

க­ழ­க­மும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­க­மும் மீண்­டும் ஏற்றம் கண்டுள்ளன.

என்­யு­எ­ஸில் கற்­பிக்­கப்­படும் 14 பாடங்­கள், முதல் பத்து இடங்­க­ளி­லும் 40 பாடங்­கள், முதல் 50 இடங்­க­ளி­லும் இடம்­பி­டித்­தன. முதல் பத்து இடங்­களில் இடம்­பெ­றும் பாடங்­களில் கலை வர­லாறு, கட்டடப் பொறி­யி­யல், புவி­வி­யல் ஆகி­யவை அடங்­கும். என்­டி­யு­வில் கற்­பிக்­கப்­படும் ஐந்து பாடங்­கள் முதல் பத்து இடங்­களில் இடம்­பெற்­றன. அவற்­றில் தொடர்பு, ஊட­கக் கல்வி, மூன்று பொறி­யி­யல் பாடங்கள் ஆகி­யவை அடங்­கும். சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கற்­பிக்­கப்­படும் இரண்டு பாடங்­கள், முதல் 50 இடங்­களில் இடம்­பெற்­றன. அவை வர்த்­தக, நிர்­வா­கக் கல்வி மற்­றும் கணக்­கி­யல்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கற்­பிக்­கப்­படும் மூன்று பாடங்­கள் உல­க­ளா­விய தர­வ­ரி­சை­யில் இடம்­பெற்­றுள்­ளன. அவை கட்­ட­டக் கலை மற்­றும் ஓவி­யம், வடி­வ­மைப்பு.

அவை இரண்­டும் 151-200 பிரி­வில் இடம்­பெற்­றன.

கடந்த ஆண்­டின் தர­வ­ரி­சை­யில் என்­யு­எ­ஸின் 16 பாடங்­களும் என்­டி­யு­வின் ஏழு பாடங்களும் முதல் பத்து இடங்­களில் இடம்­பெற்­றன.