உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடும் நெரிசல்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடும் நெரிசல்

2 mins read
f369ef20-8f7a-434b-8dd7-277ead8b5968
-

ஜோகூ­ரில் இவ்­வார இறு­தி­யில் நீண்ட விடு­முறை வரு­வ­தால் சிங்­கப்­பூரை நோக்­கிச் செல்­லும் உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டி­யில் நேற்று கடும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

நேற்று வியா­ழக்­கி­ழமை ரம­லான் மாதத்­தின் முதல் நாளா­கும்.

அது மட்­டு­மல்­லா­மல், ஜோகூர் சுல்­தான் இப்­ரா­ஹிம் இஸ்­கந்­த­ரின் பிறந்த நாளுக்கும் சேர்ந்து இரண்டு நாள்­க­ளுக்­கு ஜோகூர் மாநி­லத்­தில் பொது விடு­முறை வழங்­கப்­ப­டு­கிறது.

ஆனால் வெள்­ளிக்கிழமை, சனிக்­கி­ழமை வார இறுதி நாள்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­வ­தால் அடுத்து வரும் நாளான ஞாயிற்­றுக்­கி­ழமை பொது விடு­முறை நாளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து சிங்­கப்­பூ­ருக்கு ஏரா­ள­மா­னோர் திரும்பி வந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

நேற்று ­காலை 7.00 மணிக்கே ஜோகூர் பாலம் முழு­வ­தும் வாக­னங்­கள் நீண்ட வரி­சை­யில் தேங்­கி­யி­ருப்­பதை ஒன்­மோட் ட­ரிங் இணை­யத் தளத்­தில் இடம்­பெற்­றுள்ள நேரலை ஒளி­ப­ரப்­புக் காட்­சி­கள் காட்­டின.

உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டி­யில் கடு­மை­யான போக்­கு­ வரத்து நெரி­சல் ஏற்­பட்­டுள்­ளதை காலை 8.00 மணி அள­வில் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் உறுதி செய்­தி­ருந்­தது.

"தாம­தம் ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. போக்­கு­வ­ரத்து நில­வ­ரத்­தை­ய­றிந்து பய­ணத்­தைத் தொடங்கவும்," என்­றும் ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யது.

அதே நாள் காலை 9.15 மணி­ய­ள­வில் வெளி­யிட்ட மற்­றொரு பதி­வில் கடு­மை­யான நெரி­சல் தற்­போது குறைந்­துள்­ளது என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

சென்ற புதன்­கி­ழமை ஜோகூ­ரின் முக்­கிய சாலை­க­ளி­லும் நெடுஞ்­சா­லை­க­ளி­லும் போக்­கு­ வ­ரத்து நெரி­சல் ஏற்­படும் என்று ஜோகூர் காவல்­துறை எச்­ச­ரித்­தி­ருந்­தது. சாலை பய­னாளர் களுக்கு சுமூ­க­மான பய­ணத்தை வழங்க வரும் நாள்­களில் அதி­க­மான அதி­கா­ரி­கள் கள­மி­றக்­கப்­ ப­டு­வர் என்று அது கூறி­யது.