போதைப் பொருள், சூதாட்டம் தொடர்பில் ஒன்பது பேர் கைது

போதைப் பொருள், சூதாட்டம் தொடர்பில் ஒன்பது பேர் கைது

1 mins read
00f36d23-a5d0-49af-8a3c-ee579a251b82
-

போதைப் பொருள், சூதாட்­டம் தொடர்­பில் ஒன்­பது பேர் கைது செய்­யப்­பட்­டுள்ளனர். மார்ச் 13 முதல் 17 வரை அம­லாக்க அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட ஐந்து நாள் சோத­னை­யில் சந்­தேக நபர்­கள் சிக்­கி­ய­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் காவல்­துறை தெரி­வித்­தது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்­தே­கத் தின் பேரில் 24 முதல் 66 வயது வரை­யி­லான ஏழு பேரும் அறு­பது வயது மாது ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து நான்கு பொட்­ட­லங்­களில் இருந்த கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட மருந்து என்று சந்­தே­கிக்­கப்­படும் 28.6 கிராம் சாக்லெட் நிறப் பொருள், பாரா­ஃபி­ர­னா­லியா எனும் போதை மருந்து, ஒரு கைப்பேசி ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். மற்­றொரு சம்­ப­வத்­தில் சூதாட்­டில் ஈடு­பட்ட 27 வயது நபர் கைது செய்­யப்­பட்­டார். அவர், சட்­ட­வி­ரோ­த­மாக சூதாட்­டத்தை நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை ஒடுக்­கும் நோக்­கத்­தில் ஈசூன், செம்­ப­வாங், உட்­லண்ட்ஸ், மார்­சி­லிங் ஆகிய வட்­டா­ரங்­களில் உட்­லண்ட்ஸ் காவல்­துறை, மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு தலை­மை­யில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.