நிர்வாகி, வர்த்தகருக்கு தண்டனை அதிகரிப்பு

நிர்வாகி, வர்த்தகருக்கு தண்டனை அதிகரிப்பு

1 mins read
bd26efe4-c226-4c33-9dc1-9dc24ba01ec1
-

பிபி சிங்­கப்­பூர் (BP Singapore) முன்­னாள் நிர்­வா­கிக்­கும் அவ­ருக்கு $5.88 மில்­லி­யன் லஞ்­சம் கொடுத்த வர்த்­த­க­ருக்­கும் தலா நான்­கரை ஆண்­டி­லி­ருந்து ஆறு ஆண்­டு­கள், எட்டு மாதங்­க­ளுக்கு சிறைத்­தண்­ட­னையை உயர்த்தி உயர் நீதி­மன்­றம் நேற்று தீர்ப்பளித்தது.

கிளேரன்ஸ் சாங் பெங் ஹோங்­குக்கு, 57, லஞ்­சம் வாங்­கிய தொகைக்கு ஈடாக அப­ரா­தம் செலுத்­த­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டது. பசி­பிக் பிரைம் டிரே­டிங்(பிபிடி) எனும் கடற்­துறை எரி­பொ­ருள் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான கோ செங் லீ, 60, என்­ப­வ­ரி­ட­மி­ருந்து பிபி சிங்­கப்­பூர் கடற்­துறை எரி­பொ­ருள் பிரிவின் முன்­னாள் பொறுப்­பா­ள­ரான சாங், 2006 முதல் 2010 வரை­ 19 சந்தர்ப்பங்களில் 3.95 மில்­லி­யன் யுஎஸ் டாலரை லஞ்­ச­மா­கப் பெற்­றுள்­ளார். சாங் தனது அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி கோவின் நிறு­வ­ன­மான பிபி­டிக்கு ஆதா­யம் அளிக்­கும் வகை­யில் பல வர்த்­தக வாய்ப்­பு­களை வழங்­கி­ய­தாக நீதி­மன்­றத்­தில் அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் தெரி­வித்­த­னர்.