துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ $2.1 மி. நிதி திரட்டு

துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ $2.1 மி. நிதி திரட்டு

1 mins read
f3e6000e-abf1-4230-86f0-e0faa7adf351
-

துருக்கி, சிரி­யா­வில் நிகழ்ந்த மிக மோச­மான நில­ந­டுக்­கத்­தில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­காக உள்­ளூர் அறப்­பணி அமைப்பு ஒன்று சாதனை அள­வாக 2.1 மில்­லி­யன் வெள்­ளியை திரட்டி சாத­னைப் படைத்­துள்­ளது.

கடந்த பிப்­வரி 6ஆம் தேதி 7.8 ரிக்­டர் அள­வுள்ள சக்­தி­வாய்ந்த நிலநடுக்­கம் துருக்­கி­யை­யும் சிரி­யா­வை­யும் ஆட்­டிப் படைத்­தது. இதில் பல ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்த நிலை­யில் 'ஆர்­எல்­ஏ­எஃப்' எனும் ரஹ்­ம­தான் லில் அலா­மின் எனும் அற­நி­று­வ­னம் பிப்­ர­வரி 10 முதல் 24 வரை மொத்­தம் 2,151,202 வெள்ளியை திரட்­டி­யது. இது, மனிதாபி­மான உத­விக்­காக அந்த அறப்­பணி அமைப்பு திரட்­டிய ஆகப்­பெ­ரிய தொகை­யா­கும்.

நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட இயற்­கைப் பேரி­டர் சம்­ப­வங்­களில் உதவ ஆர்­எல்­ஏ­எஃப் நிதி திரட்­டி­யி­ருக்­கிறது. இதற்கு முன் 2022ல் பாகிஸ்­தான் வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக அது 432,852 வெள்­ளி­யைத் திரட்­டி­யது.