'அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்'

'அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்'

1 mins read
bfc586a4-8c1e-4f49-84a9-80207cbb6f9f
-

அடுத்த நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொடர் தொடங்­க­வி­ருக்­கும் வேளை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்ற நாடு­களில் உள்­ள­து­போல அடிப்­ப­டை­யில்­லாத, ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­களை சுமத்த வேண்­டாம் என்று நாடாளுமன்ற நாய­கர் டான் சுவான் ஜின் கேட்­டுக்கொண்­டார்.

வரும் ஏப்­ரல் 10ஆம் தேதி நாடா­ளு­மன்­றம் மீண்­டும் கூடு­கிறது.

இந்த நிலை­யில் வரு­கின்ற கூட்­டத் தொட­ரில் எதை எதிர்­பார்க்­கி­றீர்­கள் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்­ட­தற்கு அவர் பதி­ல­ளித்­தார்.

"மற்ற நாடு­களில் அர­சி­யல்­வா­தி­கள் ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தும் அணு­கு­மு­றை­யைப் பின்­பற்­று­கின்­ற­னர். உண்மை முக்­கி­ய­மா­கக் கரு­தப்­ ப­டு­வதில்லை. அர­சி­யல்­வா­தி­கள் அதி­லி­ருந்து வில­கிச் செல்­வது வருத்­த­மா­னது. ஆனால் நாம் சிறப்­பா­கச் செயல்­பட முடி­யும்," என்று 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து நாய­க­ராக இருந்­து­ வரும் திரு டான் தெரி­வித்­தார்.

"உறுப்­பி­னர்­கள் ஆர்­வத்­து­டன் பேசு­வார்­கள் என எதிர்­பார்க்­கி­றேன். ஆனால் பதில்­களை கவ­ன­மா­கக் கேட்க வேண்­டும் என்று உறுப்­பி­னர்­களை வலி­யு­றுத்­து­கி­றேன். அது மட்­டு­மல்­லா­மல் புது விவ­கா­ரங்­களை எழுப்­பு­வதை பரி­சீ­லிக்க வேண்­டும். ஒரே விவ­கா­ரம் பற்றி பேசா­மல் அடுத்த தலைப்­பு­க­ளுக்­குச் செல்ல வேண்­டும்," என்­றார் அவர்.