நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நிறைவு

1 mins read
4cd692f5-be21-4062-b924-30bfbc873d38
-

நாடா­ளு­மன்­றத்­தின் முதல் கூட்டத்தொ­டர் நேற்று இடைக் கால­மாக ஒத்தி வைக்­கப்­பட்­டது.

அடுத்த கூட்­டத்­தொ­டர் புதிய நிகழ்ச்சி நிர­லு­டன் ஏப்­ரல் 10ஆம் தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏப்­ரல் 10ஆம் தேதி­யன்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் புதிய கூட்­டத் தொடரை தொடங்கி வைக்­க­வி­ருக்­கி­றார் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அப்­போது, தேர்­த­லுக்கு முன்­ன­தாக நடை­பெ­றும் கூட்­டத் தொட­ரில் அர­சாங்­கத்­தின் முன்­னு­ரி­மை­கள், கொள்­கை­கள், திட்­டங்­களை அதி­பர் ஹலிமா யாக்­கோப் பட்­டி­ய­லிட்டு உரை­யாற்­று­வார்.

இவ்­வாண்டு நடை­பெ­றும் அதி­பர் தேர்­த­லில் திரு­மதி ஹலிமா, அடுத்த தவ­ணைக்­குப் போட்­டி­யி­ட­வில்­லை­யென்­றால் இது அவ­ரது கடைசி மற்­றும் 3வது உரை­யாக இருக்­கும்.

நாடா­ளு­மன்ற கூட்­டத் தொட­ரின் இந்த இரண்டு வார இடை­வெளி அர­சாங்க பத­விக் காலத்­தின் நடுப்­ப­கு­தி­யைக் குறிக்­கிறது.

இந்த இடை­வெ­ளி­, இது­வரை அடைந்த அர­சாங்­கத்­தின் இலக்­கு­கள், அறி­விக்­கப்­போ­கும் திட்­டங்­கள், கொள்­கை­களை வகுக்க வழி வகுக்­கிறது.

அர­சாங்­கத்­தின் புதிய கொள்­கை­கள், திட்­டங்­களை அதி­பர் நாடா­ளு­மன்­றத்­தில் உரையாற்­றும்­போது குறிப்­பி­டு­வார்.

அடுத்த பொதுத்தேர்­தல் 2025ஆம் ஆண்­டில் நடை­பெற விருக்­கிறது.