தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் காசநோய் 4வது ஆண்டாக குறைந்தது

1 mins read
f664522a-ffd4-4797-8e65-014e3d32fe73
-

சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து நான்­கா­வது ஆண்­டாக 2022ல் காச­நோய் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தது. 2022ல் சிங்­கப்­பூர்­ வா­சி­க­ளி­டையே 1,251 புதிய காச­நோய் சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. இது, 2021ல் பதி­வான 1,300 சம்பவங்களுடன் ஒப்­பி­டு­கை­யில் சற்று குறைவு.

இருந்­தா­லும் காச­நோய் பொதுச் சுகா­தா­ரத்­துக்கு மிரட்­ட­லாக விளங்­கு­கிறது என்று நேற்று அறிக்கை வாயி­லாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மொத்த காச­நோய் சம்­ப­வங்­களில் முக்­கால்­வாசி பேர் ஐம்­பது வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள்.

2022ல் காச­நோ­யால் 405 பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

காச­நோ­யால் பாதிக்­கப்­பட்ட ஆண்­க­ளின் எண்­ணிக்கை 846. அதாவது பெண்களைவிட இரண்டு மடங்கு ஆண்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் காச­நோ­யால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கையை அமைச்சு தெரி­விக்­க­வில்லை.

2022ல் ஜாலான் புக்­கிட் மேரா­வில் ஏறக்­கு­றைய 170 பேர் காச­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இரு­மல், சளி, மார்பு வலி, இர­வில் வியர்த்­தல் போன்ற பொது­வான அறி­குறிகளால் அவர்­கள் பாதிக்­கப்­பட்டனர்.

"நமது மக்­கள்­தொ­கை­யில் காச­நோய் தொற்று பொது­வா­னது அல்ல. காச­நோ­யால் பாதிக்­கப் பட்­டவர்­களில் 30 விழுக்­காட்­டினர் முதி­ய­வர்­கள்," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.