37% நிறுவனங்கள் மட்டுமே தெளிவாகத் திட்டமிட்டுள்ளன

37% நிறுவனங்கள் மட்டுமே தெளிவாகத் திட்டமிட்டுள்ளன

2 mins read
d355e55f-b7fb-4969-8ef3-6c7e4afa1c5d
-

சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மை இலக்குகள் குறித்த கருத்தாய்வு

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அவற்­றின் நீடித்த நிலைத்­தன்மை தொடர்­பான இலக்­கு­களை எட்­டு­வ­தற்­குப் பொரு­ளி­யல் அக்­க­றை­களும் தெளி­வற்ற அறிக்­கைத் தர நிலை­க­ளுமே பொது­வான தடை­கள் என்று அண்மை ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

டிபி­எஸ் வங்கி இந்­தக் கருத்­தாய்வை நடத்­தி­யது.

ஆய்­வில், 83 விழுக்­காட்டு சிறிய நிறு­வ­னங்­களும் 92 விழுக்­காட்டு நடுத்­தர நிறு­வ­னங்­களும் சுற்­றுப்­பு­றம், சமூ­கம், நிர்­வா­கம் ஆகிய அம்­சங்­கள் தொடர்­பான உத்­தி­க­ளைப் பின்­பற்­று­கின்­றன அல்­லது அத்­த­கைய உத்­தி­களை உரு­வாக்கி வரு­கின்­றன.

இருப்­பி­னும், இவற்­றில் 37 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் மட்­டுமே இந்த இலக்­கு­களை அடை­வ­தற்­கான தெளி­வான திட்­டங்­களை வகுத்­துள்­ளன.

"சிறிய நிறு­வ­னங்­க­ளுக்கு பணப்­பு­ழக்­கம் மிக­வும் முக்­கி­ய­மான அம்­சம்.

"நிதி ரீதி­யான தடை­களை இவை சந்­திப்­பது வழக்­கம்.

"முத­லீடு, லாபம், வளர்ச்சி இலக்­கு­களை எட்­டு­தல் போன்­றவை தொடர்­பில் சவால்­க­ளைச் சந்­திப்­ப­தாக மூன்­றில் ஒரு பங்கு நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்டன," என்று டிபி­எஸ் வங்கி கூறி­யது.

'புளூம்­பெர்க் மீடியா ஸ்டு­டி­யோஸ்' நிறு­வ­னத்­து­டன் இணைந்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கி இந்­தக் கருத்­தாய்வை நடத்­தி­யது.

இதில், 800க்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் பங்­கு­பெற்­றன.

இவை பெரும்­பா­லும் சிங்­கப்­பூர், ஹாங்­காங், இந்­தியா, இந்­தோ­னீ­சியா, சீனா, தைவான் ஆகி­ய­வற்­றில் செயல்­படும் நிறு­வனங்­கள்.

சொத்­துச் சந்தை, மின்­சா­ரம், வேளாண்மை, விருந்­தோம்­பல், உணவு-பானம் உள்­ளிட்ட துறை­க­ளைச் சேர்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பங்­கு­பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் நீடித்த நிலைத்­தன்மை இலக்­கு­களை எட்­டு­வ­தில் சவால்­க­ளைச் சந்­திப்­ப­தைப் புரிந்­து­கொள்ள இயல்­வ­தா­கக் கூறிய வங்­கி­யின் தலைமை நிர்­வாகி பியுஷ் குப்தா, இவை பொரு­ளி­ய­லின் உயி­ரோட்­ட­மா­கக் கரு­தப்­ப­டு­வ­தால் இத்­த­கைய நிறு­வ­னங்­கள் வெற்­றி­க­ர­மாக இந்த இலக்­கு­களை எட்­ட­வேண்­டி­யது கட்­டா­யம் என்­றார்.

கருத்­தாய்­வில் பங்­கு­பெற்ற நிறு­வ­னங்­கள், சுற்­றுப்­பு­றம் தொடர்­பான திட்­டங்­க­ளுக்கே அதிக முத­லீடு தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறின.

கழி­வு­ நிர்­வா­கம், பரு­வ­நிலை மாற்­றம், கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் போன்ற துறை­களில் சுற்­றுப்­புற அம்­சங்­கள் தங்­கள் தொழி­லில் தாக்­கம் ஏற்­ப­டுத்­து­வ­தா­கக் கூறின.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அவற்­றின் நிதி நிலையை மேம்­ப­டுத்­தும் திட்­டங்­க­ளுக்­கும் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த இய­லும் திட்­டங்­க­ளுக்­கும் முன்­னு­ரிமை தரு­வ­தாக ஆய்­வில் தெரிய­வந்­துள்­ளது.

இலக்­கு­களை எட்டுவதற்கான தெளி­வான உத்­தி­களை வகுத்து செயல்­ப­டுத்­து­வ­தில் அவை சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­றன.