பாலஸ்டியர் ரோடு ஷா திரையரங்கம் மீண்டும் திறப்பு; இலவச நுழைவுச்சீட்டுகள்

2 mins read
a43fd0a6-3778-4235-9149-8b9aea4ddb18
-

பாலஸ்­டி­யர் ரோட்­டில் உள்ள ஷா திரை­ய­ரங்­கம் புதுப்­பிப்­புப் பணி­களுக்­குப் பிறகு வரும் வியா­ழக்­கி­ழமை மீண்­டும் திறக்­க­வி­ருக்­கிறது. கடந்த ஆகஸ்ட் 2019லிருந்து கிட்­டத்­தட்ட மூன்­றரை ஆண்­டு­க­ளாக அங்கு புதுப்­பிப்­புப் பணி­கள் நடை­பெற்றன.

மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கு­வதை முன்­னிட்டு அடுத்த வாரம் திங்­கள், செவ்­வாய், புதன்­கி­ழ­மை­களில் திரை­ய­ரங்­கம் பொது­மக்­க­ளுக்கு இல­வ­ச­மா­கச் சேவை வழங்­க­வி­ருக்­கிறது.

மூன்று நாள்­க­ளி­லும் மொத்­தம் 850 இல­வச நுழை­வுச்­சீட்­டுத் தொகுப்­பு­கள் வழங்­கப்­படும். ஒவ்­வொரு தொகுப்­பி­லும் இரண்டு நுழை­வுச்­சீட்­டு­கள் இருக்­கும். ஷா திரை­ய­ரங்­கம் இந்­தத் தக­வல்­களை நேற்று வெளி­யிட்­டது.

திங்­கள், செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் ஒவ்­வொரு நாளும் முத­லில் வரும் 350 பேருக்கு இல­வச நுழை­வுச்­சீட்­டுத் தொகுப்­பு­கள் வழங்­கப்­படும். எஞ்­சிய 150 தொகுப்­பு­கள் அடுத்த வாரம் புதன்­கி­ழமை வழங்­கப்­படும்.

ஒரு­வ­ருக்கு ஒரு தொகுப்பு மட்­டுமே வழங்­கப்­படும். இதற்­கான காத்­தி­ருப்பு வரிசை அந்­தந்த நாளில் காலை 10 மணிக்­குத் தொடங்­கும்.

திங்­கள், செவ்­வாய்க்­கி­ழமை வழங்­கப்­படும் இல­வச நுழை­வுச்­சீட்­டு­களை அன்­றைய நாளில் முற்­ப­கல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திரை­யி­டப்­படும் திரைப்­ப­டங்­க­ளுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த இய­லும். 'லுமி­யேர்' அரங்­கம், வழக்­க­மான அரங்­கு­கள் ஆறு ஆகி­ய­வற்­றில் இவற்­றைப் பயன்­ப­டுத்­த­லாம்.

புதன்­கி­ழமை வழங்­கப்­படும் நுழை­வுச்­சீட்­டு­களை அன்று முற்­ப­கல் 11 மணி முதல் பிற்­ப­கல் 3 மணி வரை திரை­யி­டப்­படும் திரைப்­ப­டங்­க­ளுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த முடி­யும்.

புதிய வளாகத்தில் மொத்தம் 11 அரங்குகள் உள்ளன. வெவ்வேறு பிரிவினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் உள்அலங்காரம் பாலஸ்டியர் வட்டாரத்தின் மரபுடைமையைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாக உரிமையாளர்கள் கூறினர்.