கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையில் மாதாந்தரச் சந்திப்பினை நடத்தி வருகிறது.
அந்த வகையில் கவிமாலையின் 274வது சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு தேசிய நூலகம், தளம் 5, 'பாசிபிலிட்டி' அறையில் நடைபெற இருக்கிறது.
இம்மாதச் சந்திப்பில் ஜெயகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட கவிஞர் மண்குதிரை கலந்துகொள்கிறார்.
இவர் இந்து தமிழ் செய்தித்தாளில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
'புதிய அறையின் சித்திரம்' எனும் நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
'கைதியின் குரல்' என்கிற பெயரில் குவான்டானமோ சிறைவாசிகளின் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
'நண்பகல் நேரத்து மயக்கம்' எனும் மலையாளத் திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
கவிஞர்கள் குறித்தும் கவிதை இயல் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
இன்றைய நிகழ்ச்சியில், இணையம் வழி 'தமிழ்க் கவிதைகளின் போக்கும் மாற்றமும்' என்ற தலைப்பில் கவிஞர் மண்குதிரை சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தல், 'தன்னையறிந்தால்' எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகளை வாசித்தல் ஆகிய அங்கங்களுடன் பரிசளிப்பும் இடம்பெறவிருக்கிறது. போட்டிக் கவிதைகள் குறித்த விமர்சன அங்கமும் இடம்பெறும்.
கவிதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.
அனுமதி இலவசம்.

