பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர்மீது குற்றச்சாட்டு

பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர்மீது குற்றச்சாட்டு

1 mins read
3915f3b6-5832-48fc-8ffe-602b85b5ec79
-

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­கழக (என்­யு­எஸ்) முன்­னாள் விரி­வு­ரை­யா­ள­ரும் தெம்­புசு கல்­லூரி ஆய்­வா­ள­ரு­மான 43 வயது ஜெரெமி ஃபெர்னாண்­டோ­மீது (படம்) நேற்று மான­பங்­கக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

2020ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி மாது ஒரு­வரை அவர் முத்­த­மிட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் பொருட்டு மேல்­வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

முறை­யற்ற நடத்தை குறித்த புகார்­க­ளின் அடிப்­ப­டையில், 2020ல் பல்­க­லைக்­க­ழ­கம் அவ­ரைப் பணி­யி­லி­ருந்து நீக்­கி­ய­துடன் ஃபெர்னாண்டோ குறித்து காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­தது.

$10,000 பிணை­யில் வெளி­வந்­துள்ள அவ­ரது வழக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி மீண்­டும் விசா­ர­ணைக்கு வரும்.