ஆசியான்-சீனா ஒத்துழைப்பு மேம்பட பிரதமர் லீ வலியுறுத்து

ஆசியான்-சீனா ஒத்துழைப்பு மேம்பட பிரதமர் லீ வலியுறுத்து

2 mins read
b7b79a6c-5a75-4779-8f39-7bc86a1b038c
-

ஆசி­யா­னுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் பொரு­ளி­யல் ஒத்­துழைப்பை மேலும் மேம்­ப­டுத்­தும் வகை­யில் அந்த இரண்டு தரப்பு­களுக்­கும் இடைப்­பட்ட அர­சி­யல் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட வேண்­டிய தேவை இருக்­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

தென்­சீ­னக் கட­லில் நடத்தை நியதி தொடர்­பான பேச்­சு­வார்த்தை­கள் பல ஆண்­டு­க­ளா­கத் தேங்­கிக் கிடக்­கின்­றன.

இதை எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்ட பிர­த­மர், அதன் தொடர்­பில் மேலும் முன்­னேற்றம் ஏற்­படும் என்று சிங்­கப்­பூர் நம்­பு­வதா­கத் தெரி­வித்­தார்.

சீன மத்திய தொலைக்காட்சி நிறு­வ­னத்­திற்­கு அளித்த பேட்­டி­யில் பிர­த­மர் இவ்­வாறு கூறி­னார். அந்­தப் பேட்டி வெள்­ளிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.

திரு லீ, அந்த ஒரு மணி நேரப் பேட்­டி­யில் சிங்­கப்­பூர்-சீனா உறவு, சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­ற­வுக் கொள்கை, உலக அரங்­கில் சீனா­வின் எழுச்சி ஆகி­யவை பற்றி கருத்து தெரி­வி­த்தார்.

சீனா-ஆசி­யான் தாராள வர்த்­தக வட்­டார ஏற்­பாட்டை மேம்­படுத்­து­வ­தில் சிங்­கப்­பூர் ஆற்­றக்­கூ­டிய பங்கு பற்றி கருத்­து­ரைத்த பிர­த­மர், அதில் சிங்­கப்­பூர் முழுமை­யாக ஈடு­படும் என்­றும் அந்த ஏற்­பாட்டை மேம்­ப­டுத்த உதவ முய­லும் என்­றும் கூறி­னார்.

இத­னி­டையே, கணிதம் படித்த தான், கணித வல்­லு­ந­ராக ஆகா­மல் அர­சி­ய­லைத் தேர்ந்து எடுத்­துக்­கொண்­டது குறித்து தமக்கு வருத்­தம் கிடை­யாது என்­றும் திரு லீ பேட்­டி­யில் குறிப்­பிட்­டார்.

பிர­த­மர், பிரிட்­ட­னில் கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்கழ­கத்­தில் இள­நிலை பட்­டப்­ப­டிப்பு பயின்­ற­போது கணி­தம் படித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் தம்மை நம்பும்­படி செய்­வது என்பது முடி­வில்­லாத ஒரு பணி என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"இள­நிலை பட்­டப்­ப­டிப்பு படித்­த­போது இரண்டு ஆண்­டு­கள் கணி­தம் பயின்­றேன். சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்பி, சிங்­கப்­பூ­ரின் ஓர் அங்­க­மாகி, நாடு வெற்றி அடைய என்­னால் முடிந்­ததைச் செய்­ய­வேண்­டிய பொறுப்பு எனக்கு இருந்­தது," என்­றும் அவர் கூறி­னார்.

அரசியல் வாழ்க்கை மிகவும் மனநிறைவான வாழ்க்கையாக இருந்து வந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.