குடும்ப மருத்துவருக்கும் இதய நிபுணர்களுக்கும் இடைப்பட்ட அணுக்கத் தொடர்பின் மூலம் இதய நோயாளிகள் நன்மையடை யலாம் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் இதய நலச் சங்கத்தின் 34வது வருடாந்திர அறிவியல் மாநாட்டில் அமைச்சர் நேற்று உரையாற்றினார்.
குடும்ப மருத்துவர்கள் நோயாளியைக் கண்காணித்து அவரின் உடல்நலனை அணுக்கமாகத் தெரிந்துகொண்டு வரலாம் என்று அவர் தெரிவித்தார்.
நிலைமை மோசமாக இருந்தால் இதய சிகிச்சை நிபுணர்களிடம் நோயாளியை அனுப்பி வைக்கலாம் என்று சுகாதார அமைச்சர் விளக்கினார்.

