‘சென்ற ஆண்டு மீண்டும் தொடங்கின’

கொவிட்-19 சூழலில் ஒத்திவைக்கப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் குறித்து சுகாதார அமைச்சு

அவ­ச­ர­மற்ற அறுவை சிகிச்­சை­கள் கொவிட்-19 நோய்ச் சூழ­லில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. கிருமிப் பரவல் நில­வ­ரம் சிங்­கப்­பூ­ரில் மேம்­பட்டு வரு­வதை அடுத்து அவை மீண்­டும் கடந்த ஆண்டு தொடங்­கி­விட்­ட­தாகச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

துணைக் கிரு­மித் திரி­பு­கள் கார­ண­மாக அதி­க­மா­னோர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது விருப்ப அறுவை சிகிச்­சை­கள் மேற்­கொள்­வதை மருத்­து­வ­ம­னை­கள் ஒத்­தி­வைக்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெரி­வித்­தார்.

இத்­த­கைய அறுவை சிகிச்­சை­களை மருத்­து­வ­ம­னை­கள் 2020ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் ஒத்­தி­வைக்­கத் தொடங்­கின.

பின்­னர், ஏப்­ரல் முதல் ஜூன் மாதம் வரை­யி­லான கிருமி முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­துக்­குப் பிறகு மீண்­டும் இக்­கு­றிப்­பிட்ட அறுவை சிகிச்­சை­கள் படிப்­ப­டி­யா­கத் தொடங்கின.

அதை­ய­டுத்து, மருத்­து­வ­ம­னை­களும் நிபு­ணத்­துவ வெளிநோ­யாளி மருந்­த­கங்­களும் அவ­ச­ர­மல்­லாத அறுவை சிகிச்­சை­க­ளை­யும் மருத்­து­வச் சந்­திப்பு­க­ளை­யும் மீண்­டும் ஒத்­தி­வைக்கும்படி 2021ஆம் ஆண்டு மே மாதத்­தில் சுகா­தார அமைச்சு கேட்­டுக்­கொண்­டது.

இருப்­பி­னும், அவ்வேளையில் மருத்­துவ உதவி அவ­சி­ய­மா­கத் தேவைப்­பட்­டோ­ருக்­குத் தொடர்ந்து தக்க கவ­னிப்­பு வழங்கப்பட்டது.

கொள்­ளை­நோய்ச் சூழ­லில் சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு நில­வி­யது.

சில மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­கள் 20 மணி­நே­ரம்கூட காத்­தி­ருக்­கும் நிலை ஏற்­பட்­டது.

இத்தகைய ­சூ­ழல் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் வரை­நீடித்­தது.

பெரும்­பா­லான பொது மருத்­து­வ­ம­னை­களும் தேசிய நிபு­ணத்­துவ மருத்­துவ நிலை­யங்­களும் அவ­ச­ர­மற்ற அறுவை சிகிச்­சை­களில் 3 முதல் 5 விழுக்­காட்­டினை 2021ல் தள்­ளி­வைத்­த­தாக சுகா­தார அமைச்சு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது.

‘சிங்­ஹெல்த்’, ‘தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம்’ (என்­எச்ஜி), ‘தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தார அமைப்­பு­முறை’ (என்­யு­எச்­எஸ்) ஆகிய சிங்­கப்­பூ­ரின் மூன்று சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­களும் முன்­ன­ர் ஒத்­தி­வைத்த விருப்ப அறுவை சிகிச்­சை­களை மீண்­டும் தொடங்கிவிட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளன.

இருப்பினும் இத்தகைய சிகிச்சைகளின் எண்­ணிக்கை குறித்­துத் தக­வல்­ வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும் கொவிட்-19 கால­கட்­டத்­தில் ஒத்­தி­வைத்த விருப்ப அறுவை சிகிச்­சை­களில் பெரும்­பா­லா­ன­வற்றை குழு­மம் மேற்­கொண்­டுள்­ள­தாக என்­எச்ஜி மருத்­து­வக் கழ­கக் குழு­மத்­தின் தலை­வர் லிம் டோக் ஹான் தெரி­வித்­தார்.

அறுவை சிகிச்­சைக்­குப் பிறகு அதே நாளில் வீடு திரும்­பக்­கூ­டிய நோயா­ளி­கள், குறு­கி­ய­கால படுக்­கைப்­பி­ரி­வுக் கட்­டில்­கள் ஆகிய இரண்டு பிரிவுகளி­லும் குழு­மம் அதன் ஆற்­றலை அதி­க­மாக்­கி­ய­தாக அவர் விளக்­கி­னார்.

கொள்­ளை­நோ­யின்­போது தொடங்­கிய சில முயற்­சி­க­ளைச் சில மருத்­து­வ­ம­னை­கள் தொடர்ந்து மேற்கொள்கின்றன.

மீண்­டும் ஒரு கிரு­மிப் பர­வல் அல்­லது ஒரு கொள்­ளை­நோய் வர­லாம் என்ற சாத்­தி­யத்­தால் என்­யு­எச்­எஸ் குழு­மம் அதன் தொலைத்­தொ­டர்பு மருத்­துவ ஆலோ­ச­னைச் சந்­திப்­பு­க­ளை­யும் வீடு­க­ளி­லேயே குண­ம­டை­யும் திட்­டத்­தை­யும் தொடர்­கிறது.

அவ­ச­ர­மல்­லாத அறுவை சிகிச்­சை­க­ளுக்­காக ஒரு­சில மருத்­து­வ­ம­னை­கள் குறைந்த அளவு ஊடுருவல் முறையிலான அறுவை சிகிச்சையையும் அதி­கம் கையா­ளத் தொடங்­கி­யுள்­ளன. இத­னால் நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யில் ஒரு நாளுக்கு மேல் தங்­கும் தேவை இருக்­காது என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!