ரெட்ஹில் எம்ஆர்டி ரயில் நடைபாதையில் மோதிய வேன், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ஓட்டுநர் மரணம்

ரெட்ஹில் எம்ஆர்டி ரயில் நடைபாதையில் மோதிய வேன், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ஓட்டுநர் மரணம்

2 mins read
3a74ebfa-adf0-41d2-a3d4-905e2d67cb4a
-

ரெட்ஹில் எம்ஆர்டி நிலைய நடைபாதையை நோக்கி அதி வேகத்தில் வந்த வேன் ஒன்று தடுப்புகள் மீது பயங்கரமாக மோதி நின்றது.

இந்த விபத்தில் பாதுகாப்பு அதிகாரியான டெங் ஹாவ் ஹின் மயிரிழையில் உயிர் தப்பினார்.

ஜாலான் டியோங்கிலிருந்து டியோங் பாரு ரோட்டை நோக்கி அதிவேகத்தில் வந்த வேனை கண்டதும் அவர் நடைபாதையி லிருந்து விலகி நின்றார்.

"சற்று எச்சரிக்கையாக இல்லாமல் இருந்திருந்தால் இந் நேரம் உயிர் போயிருக்கும்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் 53 வயது டெங் தெரிவித்தார்.

வேனிலிருந்து புகை வந்த தாகவும் வழிப்போக்கர்களில் ஒருவர், அணைத்ததாகவும் அவர் சொன்னார்.

அறுபது வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், முன்பக்கமாக சாய்ந்து இருந்ததாக அவர் கூறினார்.

பிற்பகல் 3.20 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத் தாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, விபத்து நிகழ்ந்த எண் 920 தியோங் பாரு சாலை அருகே வந்து சேர்ந்தது.

முன் இருக்­கை­யில் நசுங்­கிய பகு­தி­யில் சிக்­கி­யி­ருந்த ஓட்டுநரை அதி­கா­ரி­கள் மீட்டு சுயநினை வின்றி சிங்­கப்­பூர் பொது மருத்­து­ வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். ஆனால் 72 வயது ஓட்டுநர் பின்னர் இறந்துவிட்டார்.

இரு­பது நிமி­டங்­க­ளுக்கு மேலாக அவ­ருக்கு இத­யத் துடிப்பை மீட்­கச் செய்­யும் முத­லு­தவி சிகிச்­சையை துணை மருத்து­வர்­கள் மேற்­கொண்­ட­தாக டெங் மேலும் கூறி­னார்.

விபத்­தில் வேனின் முன்­பக்க கண்­ணாடி உடைந்து சித­றி­யி­ருந்­தது. ஒரு டயர் நடை­பாதை மீது ஏறி மறு­பக்­கம் நீட்­டிக் கொண்­டி­ருந்­தது. வேன் மோதி­ய­தில் தடுப்­பு­கள், நடை­பா­தை­யின் கூரை மற்­றும் தூண்­களும் சேத­ம­டைந்­தன. விபத்­துக்­கான கார­ணம் தெரிய­வில்லை. காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வரு கின்றனர்.