'மத்திய வர்த்தக வட்டாரங்களில் வாடகை அதிகரிப்பு'

'மத்திய வர்த்தக வட்டாரங்களில் வாடகை அதிகரிப்பு'

1 mins read
0b0ba030-3166-48b2-a0b5-b57de0177142
-

சிபிடி என்­ற­ழைக்­கப்­படும் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் இவ் வாண்­டின் முதல் காலாண்­டில் அலு­வ­ல­கங்­க­ளுக்­கான வாடகை அதி­க­ரித்­துள்­ளது.

தேவை அதி­க­ரிப்­ப­தா­லும் அதோடு போது­மான அலு­வ­லக இடங்­கள் இல்­லா­த­தா­லும் வாடகை அதி­க­ரிக்க கார­ணம் என்று நைட்­ஃபி­ராங்க் சிங்­கப்­பூர் தெரி­வித்­தது.

ராஃபிள்ஸ் பிளேஸ்/ மரினா பே வட்­டா­ரங்­களில் வாடகை முதல் காலாண்­டில் 1.3 விழுக்­காடு அதி­க­ரித்­தது. இது, ஒரு மாதத்­திற்கு ஒரு சதுர அடிக்கு சரா­ச­ரி­யாக 10.83 வெள்­ளி­யா­கும்.

மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் இடம் பிடித்­துள்ள அலு வல­கங்­க­ளின் பரப்­ப­ள­வில் எந்­த­வித மாற்றமும் இல்லை.

சுமார் 94.1 விழுக்­காடு இடங்­கள் வாட­கைக்கு விடப்­பட்­டுள்­ளன. முதன்மை அலு­வ­லக இட­மா­கக் கரு­தப்­படும் ராஃபிள்ஸ் பிளேஸ்/ மரினா பே-யில் 95.4 விழுக்­காடு இடங்­கள் நிரப்­ப­பட்­டுள்­ளன.

இது, 2022ஆம் ஆண்­டின் நான்­கா­வது காலாண்­டின் 95.5 விழுக்­கா­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சற்­றுக் குறைவு.