அதிகரிக்கும் வாடகையால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள்; ஊழியர்கள் கவலை

அதிகரிக்கும் வாடகையால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள்; ஊழியர்கள் கவலை

2 mins read
1c587bd8-5f1d-4c97-85ed-9383db028acc
-

பண­வீக்­கம் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் வாட­கை­யும் இதர செல­வு­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இத­னால் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் ஐரோப்­பிய நிறு­வ­னங்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­று­வது குறித்து பரி­சீ­லித்து வரு­கின்­றன. அதி­க­ரிக்­கும் குடி­யி­ருப்பு வாட­கை­யால் ஊழி­யர்­களும் கவலை அடைந்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் ஐரோப்­பிய வர்த்­தக சபை (யுரோ­சாம்) நடத்­திய ஆய்­வில் இந்த விவ­ரங்­கள் தெரிய வந்­தன.

ஆய்­வின் முடிவு மார்ச் 24ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­கான செல­வு­கள் எந்த வகை­யில் நிறு­வ­னங்­களை பாதித்­துள்­ளன என்­பதை மதிப்­பி­டு­வ­தற்­காக இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

மொத்­தம் 268 நிறு­வ­னங்­கள் ஆய்­வில் பங்­கேற்­றன.

'யுரோ­சாம்' தன்­னிச்­சை­யாக செயல்­படும் லாப நோக்­கற்ற நிறு­ வ­ன­மா­கும்.

ஐரோப்­பிய வர்த்­தக சமூ­கத்­தைப் பிர­தி­நி­திக்­கும் இந்த அமைப்பு, இரு தரப்பு வர்த்­த­கம், சேவை, முத­லீ­டு­களை ஐரோப்­பா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இவ்­வட்­டா­ரத்­துக்­கும் இடையே மேம்­ப­டுத்தி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் வாடகை மற்­றும் நடத்­தும் செல­வு­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் 70 விழுக்­காடு நிறு­வ­னங்­கள் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வது ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டது.

அதி­க­ரித்து வரும் சம்­ப­ளம், வாடகை இடங்­க­ளுக்­கான செலவு அதி­க­ரிப்பு போன்­றவை நிறு­வ­னத்தை நடத்­தும் செல­வு­கள் மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான இதர கார­ணங்­க­ளா­கும்.

அதே சம­யத்­தில் குடி­யி­ருப்­புக்­கான வாட­கை­யும் அதி­க­ரித்து வரு­வ­தால் 97 விழுக்­காடு ஊழி­யர்­கள் மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருப்­பது ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

வேலை­யி­டத்­தில் இவர்­க­ளது திற­னும் குறைந்து காணப்­படு கிறது.

2022 அல்­லது 2023ஆம் ஆண்­டில் தங்­க­ளு­டைய குடி­யி­ருப்பு வீட்­டுக்­கான குத்­த­கை­யைப் புதுப்­பித்த பாதி ஊழி­யர்­க­ளின் வாட­கைச் செலவு மேலும் 40 விழுக்­காடு அதி­க­ரித்­தது. இவர்­களில் 62 விழுக்­காட்­டி­னர் வாட­கைச் செல­வு­களை ஈடு­கட்ட தாங்­கள் வேலை பார்க்­கும் நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து எந்­த­வித ஆத­ர­வும் பெற­வில்லை அல்­லது 1,500 வெள்­ளிக்­கும் குறை­வான ஆத­ர­வைப் பெறு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் பரா­ம­ரிப்­புச் செல­வு­க­ளால் சிர­மப்­படும் நிறு­வ­னங்­கள், நிலைமை மேலும் மோச­ம­டைந்­தால் சிங்­கப்­பூரை விட்டு வெளி­யே­ற­வும் தயா­ராக இருப் பதை ஆய்­வின் முடி­வு­கள் காட்டு கின்­றன.