பாலியல் தொழில்: 37 சந்தேக நபர்கள் கைது

பாலியல் தொழில்: 37 சந்தேக நபர்கள் கைது

1 mins read
b68f836f-41ef-4a31-ae7f-c2d9871f3bf9
-

பாலி­யல் தொடர்­பான தொழி­லில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 37 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 35 பேர் பெண்­கள், இரு­வர் ஆண்­கள். கைதா­ன­வர்­கள் 21 வய­துக்­கும் 42 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். அவர்­க­ளி­டம் காவல்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.

கைது செய்­யப்­பட்ட இரண்டு ஆண்­களும் பெண்­களை வைத்­துப் பாலி­யல் தொழில் நடத்­தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

கைது செய்­யப்­பட்ட பெண்­கள், பாலி­யல் சேவை­ வழங்­கு­வ­தாக இணை­யத்­தில் விளம்­ப­ரம் செய்­தி­ருந்­த­தாக காவல்­துறை கூறி­யது. சிங்­கப்­பூ­ரெங்கும் பல்­வேறு இடங்­களில் இம்­மா­தம் நடத்­தப்­பட்ட அதி­ர­டிச் சோத­னை­யில் இவர்­கள் பிடி­பட்­ட­னர். பாலஸ்­டி­யர் சாலை, ஊட்­ரம் சாலை, அப்­பர் பாய லேபார் வட்­டா­ரம், சிலிகி சாலை ஆகிய இடங்­களில் உள்ள உடற்­பி­டிப்பு நிலை­யங்­களில் சந்­தேக நபர்­கள் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­ட­னர். இந்த அதி­ரடி நட­வ­டிக்கை இம்­மா­தம் 1ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி­யன்று நிறை­வ­டைந்­தது. இதைக் குற்­றப் புல­னாய்­வுத் துறை அதி­கா­ரி­களும் தங்­ளின் காவல்­துறைப் பிரிவு அதி­கா­ரி­களும் இணைந்து நடத்­தி­னர். பெண்­களை வைத்து இணை­யம் மூலம் பாலி­யல் தொழில் நடத்­தும் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் $100,000 வரை அப­ரா­த­மும் ஐந்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.