இணையம் மூலம் சிறார் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 23 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இதுதொடர்பாக 44 வயது ஆடவரிடமும் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.
சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான படங்கள், காணொளிகள், ஆபாசப் படங்கள் ஆகியவற்றை வைத்திருத்தல், விநியோகம் செய்தல் போன்றவற்றில் இவர்கள் அனைவரும் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய ஐந்து வார அதிரடி நடவடிக்கையில் இவர்கள் சிக்கினர். அதிரடி நடவடிக்கை சிங்கப்பூரெங்கும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன.
அதிரடிச் சோதனையின்போது சந்தேக நபர்களிடமிருந்து கணினிகள், கைப்பேசிகள் போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

