குழந்தையின் மரணம்: முன்வைக்கப்பட்ட 3 சாத்தியக்கூறுகள்

குழந்தையின் மரணம்: முன்வைக்கப்பட்ட 3 சாத்தியக்கூறுகள்

2 mins read
b0cb53fc-1227-4f7d-b925-6ce2429293e6
-

குழந்தை பரா­ம­ரிப்­பா­ள­ரின் பரா­ம­ரிப்­பின்­கீழ் இருந்­த­போது ஆறு மாதக் குழந்தை ஒன்று குப்­பு­றப் படுத்த நிலை­யில் சுய­நி­னை­வின்றி கிடந்­தது. அக்­கு­ழந்தை இறந்­து­விட்­ட­தாக பிறகு உறுதி செய்­யப்­பட்­டது.

குழந்­தை­யின் மர­ணம் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில். யோங் ஜிங் யு எனும் அக்குழந்தையின் மர­ணத்­துக்கு மூன்று சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக மரண விசா­ரணை அதி­காரி முன் நேற்று சாட்­சி­யம் அளித்த சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தைச் சேர்ந்த தட­ய­வி­யல் நிபு­ணர் டாக்­டர் ஆட்ரி இயோ கூறி­னார்.

2021ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 28ஆம் தேதி­யன்று குழந்­தைக்­குப் பாலூட்­டிய பிறகு பிற்­ப­கல் 3 மணி அள­வில் தொட்­டி­லில் அதை அந்­தப் பரா­ம­ரிப்­

பா­ளர் தூங்­க­வைத்­த­தாக விசா­ரணை அதி­காரி ரசல் டோங் நேற்று தெரி­வித்­தார்.

மாலை 6.20 மணி அள­வில் அக்­கு­ழந்தை குப்­புறப் படுத்த நிலை­யில் இருந்­த­தா­க­வும் அதன் முகம் நீல நிறத்தில் இருந்ததாகவும் தெரி­விக்­கப்­பட்­டது. உடனே அந்­தக் குழந்­தைப் பரா­ம­ரிப்­பா­ளர் ஆம்­பு­லன்சை அழைத்­தார்.

குழந்தை செங்­காங் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

ஆனால் சிகிச்சை பல­னின்றி அது இறந்­தது.

இதற்­கி­டையே, குழந்­தை­யின் மர­ணத்­துக்­கான கார­ணத்தை உறு­தி­யா­கச் சொல்ல முடி­ய­வில்லை என்­றார் டாக்­டர் இயோ.

மூச்­சுத்­தி­ண­றல் ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்­றார் அவர். குப்­பு­றக் கிடந்­த­தில் மூச்­சு­விட முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கும் என்று அவர் கூறி­னார்.

குழந்­தை­யின் நுரை­யீ­ர­லில் கடு­மை­யான அழற்சி ஏற்­பட்­டி­ருந்­தது பிரே­தப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­த­தா­க­வும் டாக்­டர் இயோ கூறி­னார்.

ஆனால் அந்த அழற்சி நிமோ­னி­யாவை ஏற்­ப­டுத்­தும் அள­வுக்கு மோச­மா­னது அல்ல என்­றார் அவர்.

இதை­ய­டுத்து, மூன்­றா­வது சாத்­தி­யக்­கூ­றை­யும் அவர் முன்­வைத்­தார்.

இத­யத்­துக்­குச் செல்­லும் அயனி­க­ளைப் பாதிக்­கும் மர­பணு உரு­மாற்­றத்­தா­லும் குழந்தை பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக டாக்­டர் இயோ தெரி­வித்­தார்.

இது­வும் குழந்­தை­யின் மர­ணத்­துக்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.