கூட்டுரிமை வீடு மறுவிற்பனை சந்தை பிப்ரவரியில் ஏறுமுகம்

கூட்டுரிமை வீடு மறுவிற்பனை சந்தை பிப்ரவரியில் ஏறுமுகம்

2 mins read
8edf50bf-0270-4822-82ac-500a2cd8c2cc
-

நான்கு மாதங்களுக்குப் பிறகு கைமாறிய வீடுகள் அதிகம், விலையும் கூடியது

சிங்­கப்­பூ­ரில் கூட்­டு­ரிமை அடுக்கு­மாடி வீடு­கள் மறு­விற்­ப­னைச் சந்தை, சீனப் புத்­தாண்டு காலம் கார­ண­மாக ஜன­வ­ரி­யில் மந்­த­மாக இருந்­தது. ஆனால் பிப்­ர­வரி­யில் அது சூடு­பி­டித்­தது.

அதி­க­மான வீடு­கள் கைமா­றின. விலை­யும் 1.4% அதி­க­ரித்­தது. ஜன­வ­ரி­யில் இத்­த­கைய 503 வீடு­கள் விற்­கப்­பட்­டன. பிப்­ர­வ­ரி­யில் 756 வீடு­கள் கைமா­றி­ய­தாக கணக்­கி­டப்­ப­டு­கிறது.

இது 50.3% அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

99.co, எஸ்­ஆர்­எக்ஸ் ஆகிய நிலச்­சொத்து இணை­ய­வா­சல்­கள் மூலம் இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வ­ரு­கி­ன்றன.

சொத்­துச் சந்­தை­யில் தேவையை மட்­டுப்­ப­டுத்­த­வும் விவே­க­மான முறை­யில் மக்­கள் கடன்­ வாங்­க­வும் ஊக்கமூட்­டு­வதற்­காக சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில் புதி­தாக சில நிபந்­த­னை­கள் நடப்­புக்கு வந்­தன.

அதை அடுத்து சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் தொடங்கி தொடர்ந்து நான்கு மாதங்­களில் கைமா­றிய வீடு­கள் குறைந்து வந்தன. பிப்­ர­வ­ரி­யில்­தான் சந்தை சூடு­பி­டித்­தது.

ஆண்டு இறுதி விடு­முறை, சீனப் புத்­தாண்டு கால­ங்களில் சந்தை பொது­வா­கவே ஊக்­கம் குறைந்தே இருக்­கும்.

பிப்­ர­வ­ரி­யில் சந்தை ஏறு­முக­மாகத் திரும்­பி­ய­தற்கு அதுவே கார­ண­மாக இருக்­க­லாம் என்று சொத்­துத் துறை பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

அதே­வே­ளை­யில், பிப்­ர­வ­ரி­யில் விற்­பனை அதி­க­ரித்து உள்ளது என்­பதை வைத்து, இந்தச் சந்தை மீட்சி கண்­டு­விட்­டது என்ற முடிவுக்கு வந்­து­விட முடி­யாது என்று சிலர் கூறு­கி­றார்­கள்.

கூட்­டு­ரிமை வீடு­க­ளின் மறு­விற்­பனை விலை பிப்­ர­வ­ரி­யில் 1.4% கூடியது. விலை ஜன­வ­ரி­யில் கொஞ்­சம் குறைந்திருந்­தது.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­படை­யில் கூட்­டு­ரிமை வீடு­க­ளின் ஒட்­டு­மொத்த மறு­விற்­பனை விலை சென்ற மாதம் 9.2% அதி­க­ரித்­துள்­ளது.

ஆர்ச்­சர்ட்/ஹாலந்து பகு­தி­யில் இருக்­கும் குத்­த­கைக் கால கட்­டுப்­பாடு இல்­லாத 'நிசாம் பார்க் ரெசி­டண்ட்­ஸ்'ல் உள்ள ஒரு கூட்­டுரிமை அடுக்­கு­மாடி வீடு பிப்­ர­வ­ரி­யில் $20.5 மில்­லி­யன் விலைக்கு வாங்­கப்­பட்­டது.

இதுவே பிப்­ர­வ­ரி­யில் கைமாறிய கூட்­டு­ரிமை மறு­விற்பனை வீடு­களில் ஆக அதிக விலை உள்ள வீடா­கும்.

நகர விளிம்­புப் பகுதி வீடு­களைப் பார்க்­கை­யில், ஹார்­பர்­ஃபி­ரண்ட் வட்­டா­ரத்­தில் உள்ள கெப்­பல் பேயில் கட்­டப்­பட்­டுள்ள 'ரிஃபிளெக்­‌ஷன்ஸ்' புளோக்­கில் இருக்­கும் 99 ஆண்டு குத்­த­கைக்­கால வீடு­தான் ஆக­அ­திக விலைக்கு கைமா­றிய வீடா­கும்.

அது $8,194,000 விலைக்கு வாங்­கப்­பட்­டது.