சிங்கப்பூர் கடற்பகுதிகளிலும் காணப்படும் ஃபுளோரிடா கடற்பாசி

சிங்கப்பூர் கடற்பகுதிகளிலும் காணப்படும் ஃபுளோரிடா கடற்பாசி

2 mins read
9712e766-8eb1-430d-9d37-567f0dcf77da
-

அமெ­ரிக்­கா­வின் ஃபுளோ­ரிடா அருகே கட­லில் பர­வத் தொடங்­கிய கடற்­பாசி அந்த மாநி­லத்­தின் கடற்­க­ரையை ஓர­ளவு எட்­டி­விட்­டது. அவற்றை அகற்­ற­வில்லை என்­றால் கடற்­க­ரை­யில் அந்­தப் பாசி அழு­கி­வி­டும். அப்­படி அழு­கும்­போது 'ஹைட்­ர­ஜன் சல்­பைடு' என்ற வாயு வெளி­யா­கும்.

அந்த வாயு அழு­கிய முட்டை வாடை அடிக்­கும். அத­னால் நிலத்­தடி நீர் நச்­சுத்­தன்மை அடை­யக்­கூ­டிய வாய்ப்­பு­கள் உண்டு.

இத்­த­கைய ஒரு பாதிப்பு சிங்­கப்­பூ­ருக்கு இருக்­கி­றதா என்­பது பற்றி இந்­தத் துறை­யைச் சேர்ந்த வல்­லு­நர்­கள் கருத்து கூறி­னர்.

சிங்­கப்­பூர் அருகே கட­லில் கடற்­பா­சி­கள் மிதப்­ப­தைக் கண்­டால் சிங்­கப்­பூ­ரர்­கள் அது பற்றி கவலைப்பட வேண்­டுமா, வேண்­டாமா என்­பது பற்­றி­யும் அவர்­கள் தக­வல்­க­ளைத் தெரி­வித்­த­னர்.

கடற்­பா­சி­கள் என்­பவை வெப்ப மண்­டல, துணை வெப்ப மண்­டல கடற்­ப­கு­தி­களில் உல­கம் முழு­வதும் பர­விக் காணப்­படும் ஒரு தாவர இனம்.

அவற்­றுக்கு வேர் கிடை­யாது. காற்­ற­டிக்­கும் திசை­யில் படை படை­யாக மிதந்து, நகர்ந்து செல்­லக்­கூ­டி­யவை.

அவை பெரிய அள­வில் ஒன்று திரண்டு நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­மீட்­டர் தொலை­வுக்­குக் கட­லில் கடந்து செல்­லக்­கூ­டி­யவை.

சிங்­கப்­பூரைப் பொறுத்­த­வ­ரை­தேங்­கிக் கிடக்­கும் நீர்­நி­லை­களில் அந்­தப் பாசி­கள் காணப்­படும் என்று தேசிய பூங்­காக் கழ­கத்­தின் தேசிய பன்­மய உயி­ரி­யல் நிலை­யத்­தின் கட­லோர, ஆழ்­க­டல் பிரிவு இயக்­கு­நர் டாக்­டர் கரின் துன் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் பொது­வா­கக் காணப்­படும் கடல்­வாழ் தாவர இனம் பாசி என்­றா­லும் ஃபுளோ­ரிடா அருகே இப்­போது காணப்­படும் அள­வுக்கு இங்கு அவை பர­வு­வ­தில்லை.

பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக அதிக மழை பெய்­தால் சமா­ளிக்க முடி­யாத அள­வுக்கு கடற்­பா­சி­யும் இதர நுண்­ணு­யி­ரி­களும் மண்­டி­வி­டக்­கூ­டிய வாய்ப்பு உண்டு என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆசிய சுற்­றுப்­புற பள்­ளி­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் ஏட்­ரி­யானா லோபஸ் தாஸ் சான்­டோஸ் கூறி­னார்.

தேசிய பூங்­காக் கழ­கம் கடற்­பா­சி­கள் காணப்­ப­டக்­கூ­டிய இடங்­க­ளைக் கண்­கா­ணித்து வரு­கிறது.

கடற்­பா­சி­கள் அதி­கம் மண்டி வள­ரக்­கூ­டிய கோனி தீவில் பெரிய அள­விற்கு அவை காணப்­ப­ட­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் கடற்­பா­சி­கள் பெரிய அள­வுக்கு மண்­டும் என்­ப­தற்­கான வாய்ப்பு தெரி­ய­வில்லை.

என்­றா­லும்­கூட இதர வகை தாவ­ரங்­கள் இந்த வட்­டார கடற்­பகு­தி­யில் பெருகி இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள சிங்­கப்­பூர் சுற்­றுப்­புற உயிர் அறி­வி­யல் பொறி­யி­யல் நிலை­யத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் ரெபெகா கேஸ் கூறி­னார்.