பூகிஸ் ஹோட்டலில் மாது காயம்; இரு ஆயுதங்கள்; ஐவர் கைது

2 mins read
8e72dd9c-27d9-46cf-8eb3-9c87bd2e10a3
-

பூகிஸ் பகு­தி­யில் உள்ள ஹோட்­டல் ஒன்­றில் திங்­கள்­கி­ழமை காவல்­து­றை­யி­னர் ஐந்து பேரைக் கைது செய்­த­னர்.

ஆபத்­தான ஆயு­தத்­தால் வேண்­டு­மென்றே காயம் விளை­வித்து இருக்­கி­றார்­கள் என்று நம்பப்படுவதையொட்டி அவர்­கள் கைதா­ன­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

கைதா­ன­வர்­களில் இரு­வர் பெண்­கள், மூவர் ஆட­வர்­கள். அவர்­க­ளுக்கு வயது 16 முதல் 23 வரை. கைதான மாதர்­களில் ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்டு இருந்­தது.

அந்த 19 வய­துப் பெண் சுய­நினை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

அந்த மாதும் வேறு ஒரு 23 வயது மாதும் 16 வய­துப் பைய­னும் போதைப்­பொ­ருள் புழங்கி இருப்­ப­தா­கச் சந்­தே­கிக்கப்படு ­வதாக காவல்­துறை கூறியது.

கைதான இதர இரண்டு ஆட­வர்­க­ளுக்கு வயது 18 மற்­றும் 22 என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

உத­விக்கு வரும்­படி காவல்­து­றைக்குக் காலை சுமார் 11.50 மணிக்கு தக­வல் கிடைத்­தது.

எண் 8 ஜாலான் குபோரில் உள்ள ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் பல காவல்­துறை அதி­கா­ரி­க­ளை­யும் நோய்க்­குறி வல்­லு­நர்­க­ளை­யும் தாங்­கள் கண்­ட­தாக நேரில் பார்த்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.

அந்த ஹோட்­ட­லுக்கு எதிரே இருக்­கக்­கூ­டிய காப்­பிக்­கடை ஒன்­றின் நிர்­வா­கி­யான திரு­வாட்டி ஆலன் டோங், 42, இது பற்றி கூறியபோது, தான் தனது கடைக்கு நண்­ப­கல் நேரத்­தில் சென்றபோது அந்த ஹோட்­டல் அருகே காவல்­துறை அதி­காரி­களைப் பார்த்­த­தாக கூறி­னார்.

ஒரு­வரை கையில் விலங்­கிட்டு ஹோட்­ட­லுக்கு வெளியே அதி­கா­ரி­கள் கொண்டு வந்­த­ததை தான் பார்த்­த­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சம்பவ இடத்தில் இரண்டு ஆயு­தங்­கள் காணப்­பட்­டன. அவை கூரான ஆயு­தங்­கள் என நம்­பப்­ப­டு­கிறது.

காவல்­து­றை­யி­னர் தன்னை அணுகி சில பெயர்­க­ளை­யும் அடை­யாள அட்டை எண்­க­ளை­யும் காட்டி 'இவர்­கள் யாரே­னும் அந்த ஹோட்­ட­லில் தங்கி இருந்­தார்­களா, உங்­க­ளுக்­குத் தெரி­யுமா?' என்று தன்னைக் கேட்­ட­தாக பக்­கத்­தில் உள்ள விடு­தி­களில் ஒன்­றில் வேலை செய்­யும் ஒரு­வர் கூறி­னார்.

கைதா­ன­வர்­களில் ஒரு­வருக்கு 18 வயது என்­றும் அவர் இந்­தோ­னீ­சி­யாவைச் சேர்ந்­த­வர் என்­றும் நம்­பப்­ப­டு­வதாகவும் மற்ற அனை­வரும் சிங்­கப்­பூ­ரர்­கள் என்றும் தன் பெய­ரைக் குறிப்­பிட விரும்­பாத அவர் மேலும் கூறி­னார்.

ரெஸ்ட் பூகிஸ் ஹோட்­டல் ஊழி­யர்­கள் கருத்து தெரிவிக்க மறுத்து­விட்­ட­னர். புலன்­விசாரணை தொடர்­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது.