மின்னணு சாலைக் கட்டணம் (இஆர்பி) ஏழு இடங்களில் ஏப்ரல் 3 முதல் $1 கூடும். போக்குவரத்து தேக்கத்தைத் தணிக்கும் முயற்சியாக கட்டண உயர்வு இடம்பெறுகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையம் பிப்ரவரியில் போக்குவரத்து நிலவரங்களைக் கண்காணித்தது. விரைவுச்சாலைகளில் பல இடங்களில் போக்குவரத்து தேக்கம் ஏற்பட்டது தெரியவந்தது என்று அந்த ஆணையம் அறிக்கையில் தெரிவித்தது.
விரைவுச்சாலைத் தேக்கத்தைத் தவிர்க்கும் முயற்சியாக 16 நேரங்களின்போது கட்டணம் உயரும்.
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நகரை நோக்கிச் செல்லும் ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பிறகு;
தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையில் பிராடல் ரோட்டுக்கு முன்னதாக;
தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையில் பிராடல் ரோட்டுக்குப் பிறகும் தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலைக்குச் செல்லும் தீவு விரைவுச் சாலையின் துணைச் சாலை;
தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையின் தீவு விரைவுச் சாலை (சாங்கி/சிராங்கூன் ரோட்டுக்குச் செல்லும் துணைத் தடம்;
தீவு விரைவுச்சாலை (ஆடம் மற்றும் மவுண்ட் பிளசண்ட்);
காலாங் பாய லேபார் விரைவுச்சாலை (ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே) டெஃபு ஃபிளைஓவர், மேற்கு நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலை யூனுசுக்கு முன்னதாக ஆகியவை கட்டண உயர்வுக்கு உட்படும் இடங்களாகும்.
இதற்கு முன்னதாக இஆர்பி கட்டணம் பிப்ரவரியில் சரி செய்யப்பட்டது. ஐந்து இடங்களில் ஒன்பது நேரங்களின்போது $1 கட்டணம் கூட்டப்பட்டது.

