ஆசியாவில் முதல்முறையாக சிங்கப்பூரில் எந்திரனியல் போட்டி

ஆசியாவில் முதல்முறையாக சிங்கப்பூரில் எந்திரனியல் போட்டி

2 mins read
4641f6f4-df10-46d0-a87d-95173517ac7a
-

அனைத்­து­லக அள­வி­லான எந்திரனியல் போட்­டியை சிங்­கப்­பூர், வரும் அக்­டோ­பர் மாதத்­தில் ஏற்று நடத்த இருக்­கிறது.

ஏழா­வது முறை­யாக நடை­பெ­றும் இப்­போட்­டியை ஆசிய நாடு ஒன்று ஏற்று நடத்­து­வது இதுவே முதல்­முறை.

இந்­தப் போட்­டி­யில் ஏறக்­குறைய 190 நாடு­கள் கலந்­து­கொள்­கின்­றன.

'ஒலிம்­பிக்' பாணி­யி­லான இப்­போட்­டியை அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த லாப­நோக்­க­மற்ற அமைப்­பான 'ஃபர்ஸ்ட் குளோ­பல்' நிறு­வ­னம் ஆண்­டுக்கு ஒரு­முறை நடத்­து­கிறது.

'ஸ்டெம்' எனப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யியல், கணி­தம் ஆகிய துறை­களை மேம்­ப­டுத்­து­வது இதன் இலக்கு.

புத்­தாக்­கம், நீடித்த நிலைத்­தன்மை ஆகிய அம்­சங்­களில் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்­து­வதைச் சுட்­டிய 'ஃபர்ஸ்ட் குளோ­பல்' நிறு­வ­னம், இவ்­வாண்­டுப் போட்­டி­யின் கருப்­பொ­ரு­ளு­டன் இது ஒத்­துப்­போ­வ­தா­கக் குறிப்­பிட்­டது.

இந்­தப் போட்டி நடை­பெ­றும் நேர­மும் சிங்­கப்­பூர் தேசிய அள­வி­லான ஹைட்­ர­ஜன் வாயு உத்­தி­யைத் தொடங்­கும் நேர­மும் ஒன்­றாக இருப்­பதை அமெ­ரிக்­கா­வுக்­கான சிங்­கப்­பூர்த் தூதர் அஷோக் மிர்­புரி சுட்­டி­னார்.

போட்­டி­யில் சிங்­கப்­பூர் சார்­பாக ஆங்­கிலோ சீனத் தன்­னாட்­சிப் பள்ளி மாண­வர் குழு கலந்­து­கொள்­ளும்.

2017ஆம் ஆண்டு இப்­போட்டி தொடங்­கி­யது முதல் இப்­பள்­ளி­யின் மாண­வர் குழு இதில் கலந்­து­கொண்­டு­வ­ரு­கிறது.

போட்­டி­யா­ளர்­கள் 14 முதல் 18 வயது நிரம்­பி­ய­வர்­க­ளாக இருத்­தல் வேண்­டும்.

ஒரு குழு­வில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இடம்­பெற்­றி­ருப்­பர்.

பாவனை உல­கில் தங்­கள் இயந்­திர மனி­தக் கருவி மூலம் ஹைட்­ர­ஜன் வாயு­வின் தயா­ரிப்பு, சேமிப்பு, அதை ஓர் இடத்­தி­லி­ருந்து மற்­றோர் இடத்­திற்­குக் கொண்டு செல்­லு­தல், எரி­சக்­தி­யாக மாற்­று­தல் ஆகிய நட­வ­டிக்­கை­களை மாண­வர் குழு மேற்­கொள்ள வேண்­டும்.

இவ்­வாண்டு அக்­டோ­பர் மாதம் 7ஆம் தேதி­யில் இருந்து 10ஆம் தேதி வரை நடை­பெ­றும் போட்­டி­யில் வெற்றி பெறும் மாண­வர்­க­ளுக்­குப் பதக்­கங்­கள் வழங்­கப்­படும்.

இதற்­கு­முன் இப்­போட்­டியை துபாய், ஜெனிவா, மெக்­சிகோ சிட்டி, வாஷிங்­டன் ஆகிய நக­ரங்­கள் ஏற்­று­ ந­டத்­தின.

கொவிட்-19 கால­கட்­டத்­தில் மெய்­நி­கர் முறை­யில் போட்டி நடை­பெற்­றது.

சிங்­கப்­பூர், அமெ­ரிக்க அர­சாங்­கங்­கள் இம்­முறை போட்­டிக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன.