பணவீக்கம் அச்சுறுத்துகிறது: ஆய்வில் சிங்கப்பூர்வாசிகள்

பணவீக்கம் அச்சுறுத்துகிறது: ஆய்வில் சிங்கப்பூர்வாசிகள்

2 mins read
35c061b6-033b-4b1a-adf5-661567afb2e8
-

அதி­க­ரிக்­கும் பண­வீக்­கம், பொரு­ளி­யல் மந்­த­நிலை, உய­ரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணங்­கள் ஆகி­யவை தங்­கள் நிதி இலக்­கு­களை எட்­டு­வ­தைத் தடை செய்­யும் மூன்று முக்­கிய அம்­சங்­கள் என்று சிங்­கப்­பூர்­வா­சி­கள் கூறி­உள்­ள­னர்.

'மனு­லைஃப் ஆசியா கேர் கருத்­தாய்வு 2023' எனும் அண்­மைய ஆய்­வில் 1,037 சிங்­கப்­பூர்­வா­சி­கள் பங்­கு­பெற்­ற­னர்.

நேற்று வெளி­யி­டப்­பட்ட ஆய்வு முடி­வில், பண­வீக்­கம் தங்­களை அச்­சு­றுத்­து­வ­தாக 68 விழுக்­காட்­டி­னர் கூறி­னர். இது இந்த வட்­டா­ர­வா­சி­க­ளின் விகி­தத்­தைக் காட்­டி­லும் அதி­கம் எனக் கூறப்­பட்­டது.

பொரு­ளி­யல் மந்தநிலையை 60 விழுக்­காட்­டி­னர் குறிப்­பிட்­ட­னர். கிட்­டத்­தட்ட 53 விழுக்­காட்­டி­னர் மருத்­து­வக் கட்­டண உயர்வு மிரட்­ட­லாக விளங்­கு­வ­தா­கக் கூறி­னர்.

ஆய்­வில் கலந்­து­கொண்­டோ­ரில் 50 விழுக்­காட்­டுக்கு மேற்­பட்­டோர் நெருக்­கடி நேரச் சேமிப்பு குறித்து உறுதி தெரி­வித்­த­னர்.

தற்­போ­தைய வாழ்க்­கை­மு­றை­யைத் தொட­ர­வும் அவர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.

ஆசி­யா­வின் ஏழு இடங்­களில் 25 வயது முதல் 60 வயது வரை­யி­லா­னோ­ரி­டம் இந்­தக் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது.

சென்ற ஆண்டு டிசம்­பர் மாதம் முதல் இவ்­வாண்டு ஜன­வரி மாதம் வரை ஆய்வு இடம்­பெற்­றது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆய்­வில் பங்­கு­கொண்­டோ­ரில் 43 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தங்­கள் ஓய்­வுக்­கா­லத்­திற்­குத் தேவை­யான தொகையை முழு­மை­யாக சேமிக்க இய­லும் என்று கூறி­உள்­ள­னர்.

சிங்­கப்­பூர்­வா­சி­கள் அதி­கம் முன்­னு­ரிமை தரும் தனிப்­பட்ட நிதி இலக்கு என்­பது கூடு­மா­ன­வரை முன்­கூட்­டியே பணி­யி­ல் இ­ருந்து ஓய்வு பெறு­வது என்று ஆய்வு குறிப்­பிட்­டது.

ஆனால் அதற்­குத் தாங்­கள் இன்­னும் திட்­ட­மி­ட­வில்லை என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

ஆய்­வில் கலந்­து­கொண்ட ஏறக்­கு­றைய 63 விழுக்­காட்டு சிங்­கப்­பூர்­வா­சி­கள் ஓய்­வுக்­கா­லத்­திற்கு சேமிப்­ப­தற்கு முக்­கிய முன்­னு­ரிமை தரு­வ­தா­கத் தெரி­வித்­த­னர். ஒப்­பு­நோக்க, இந்த வட்­டா­ரத்­தில் இவ்­வாறு கருத்­து­ரைத்­த­வர்­க­ளின் சரா­சரி விகி­தம் 49 விழுக்­காடு.

சிங்­கப்­பூர்­வா­சி­களில் பெரும்­பா­லோர் 62 வய­தில் ஓய்­வு­பெற விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­ட­னர்.

25 வயது முதல் 35 வயது வரை­யி­லா­னோ­ரில் 25 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ஓய்­வுக்­கால சேமிப்பு குறித்­துத் திட்­ட­மி­டு­வ­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

45 வய­துக்கு மேற்­பட்­டோ­ரி­டம் இந்த விகி­தம் 44 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.