ஜோகூர் மோசடிக் கும்பல் முறியடிப்பு

ஜோகூர் மோசடிக் கும்பல் முறியடிப்பு

1 mins read
9346d843-0830-4505-bae1-a4b86b0a8950
-

சிங்­கப்­பூர், மலே­சிய காவல்­து­றை­க­ளின் ஒத்­து­ழைப்­பால், ஜோகூ­ரில் செயல்­பட்ட மோச­டிக் கும்­பல் ஒன்று முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. அது சிங்­கப்­பூ­ரர்­களை இலக்­கா­கக் கொண்டு செயல்­பட்­டது. இதன் தொடர்­பில் 18லிருந்து 27 வயது வரை­யி­லான மூன்று மலே­சிய ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்டு நேற்று முன்­தினம் ஜோகூ­ரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு வரப்­பட்­ட­னர்.

ஜோகூ­ரி­லுள்ள ஒரு வீட்­டில் இருந்து செயல்­பட்ட அவர்­களை அரச மலே­சியக் காவல்­துறை இம்­மா­தம் 20ஆம் தேதி கைது செய்­தது.

இந்த போலி நண்­பர் மோச­டி­யில், ஏமாற்­றுக்­கா­ரர் நண்­பர் போல நடித்து அவர்­க­ளி­டம் நிதி­யு­தவி கேட்­பார். இவ்­வாண்டு தொடக்­கத்­தில் ஆரம்­பித்த இக்­கும்­பல் தொடர்­பில் 40க்கு மேற்­பட்ட புகார்­கள் சிங்­கப்­பூர் காவல்­து­றை­யி­டம் செய்­யப்­பட்­டன. இதில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் $250,000 மேற்­பட்ட பணத்தை இழந்­துள்­ள­னர்.

அந்த மூன்று ஆட­வர்­ மீது இன்று ஏமாற்­று­வ­தற்கு சதித்­திட்­டம் தீட்­டிய குற்­றம் சுமத்­தப்­படும். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் மூன்று ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.