ஜனவரியிலிருந்து வேலை தொடர்பான மோசடிகளில் $17.6 மில்லியன் இழப்பு

ஜனவரியிலிருந்து வேலை தொடர்பான மோசடிகளில் $17.6 மில்லியன் இழப்பு

3 mins read
2283a3eb-6a8f-44fc-8de6-02fdf14f14d0
-

இவ்­வாண்­டில் இது­வரை குறைந்­தது 1,013 பேர் வேலை தொடர்­பான மோச­டி­களில் சிக்­கி­, $17.6 மில்லியன் பணத்தை இழந்தனர்.

வேலை தேடி வரு­வ­தா­கச் சொல்லி ஏமாற்­றப்­படும் அவர்­கள் முத­லில் எளி­தான கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளிக்க சொல்­லப்­ப­டு­வார்­கள். பின்­னர் அவர்­க­ளுக்கு போலி­யான வேலை­கள் மோச­டிக்­கா­ரர்­க­ளால் வழங்­கப்­படும்.

இது­போன்ற வேலை தொடர்­பான மோச­டி­களில் சிக்க வேண்­டாம் என்று எச்­ச­ரித்த காவல்­துறை, முத­லில் வாட்ஸ்­அப் அல்­லது டெலி­கி­ராம் தளங்­கள் மூலம் எளி­தான கேள்வி பதில் அங்­கத்­திலோ அல்­லது சந்தை ஆய்­வில் பங்­கேற்­கவோ பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வார்­கள் என்று கூறி­யது.

கேள்­வி­கள், பொதுவாக உணவு விநி­யோ­கத் தளங்­கள், சுற்­று­லாத்­துறை அல்­லது நிகழ்ச்­சி­கள், விழாக்­கள் பற்­றி­ய­தாக இருக்­கும். இந்த மோச­டி­யில் சிக்­கி­ய­வர்­க­ளுக்கு ஒரு சிறிய ஊக்­கத்­தொகை அளிக்­கப்­படும்.

"தங்­க­ளுக்கு இந்த வழி­யில் பணம் கிடைக்­கிறது என்று நம்­பும் மக்­கள், மேலும் கவர்ச்சியான வேலை­கள் கிடைக்க பின்­னர் மற்­றொரு வாட்ஸ்­அப் அல்­லது டெலி­கி­ராம் தளங்­க­ளின் இணைப்­பு­கள் அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும்," என்று காவல்­துறை கூறி­யது.

மோச­டிக்­கா­ரர்­கள் பின்­னர் மின்னிலக்க நாண­யங்­க­ளின் மதிப்­பைக் கூட்ட அல்­லது கைப் பே­சிச் செய­லி­க­ளின் தர­நி­லையை மதிப்­பிட மோச­டி­யில் சிக்­கி­ய­வர்­களைக் கேட்­டுக்­கொள்­வார்­கள்.

இந்த மோச­டித் தளங்­களில் பணி­களை மேற்­கொள்ள பாதிக்­கப்­பட்­டோர் வங்­கிக் கணக்­கு­களைத் திறந்து அவற்­றின் மூலம் மோச­டிக்­கா­ரர்­கள் வழங்­கும் வங்­கிக் கணக்­கு­களில் பணத்தை மாற்­றி­வி­டச் சொல்­வார்­கள்.

"பணத்தை மாற்­றி­விட்ட பிறகு தங்­க­ளுக்­குக் கிடைக்க வேண்­டிய ஊக்­கத்­தொகை கிடைக்­கா­மல் போகும்­போதோ அல்­லது மோச­டிக்­கா­ரர்­க­ளைத் தொடர்பு­கொள்ள முடி­யா­மல் போகும்­போதுதான் தாங்­கள் ஏமாற்­றப்­பட்டு விட்­ட­தாக பாதிக்­கப்­பட்­டோர் உணர்­வார்­கள்," என்­றும் காவல்­துறை விவ­ரித்­தது.

கடந்த திங்­கட்­கி­ழமை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளி­யிட்ட செய்­தி­யில், இது­போன்ற ஒரு மோசடி பற்றி தெரி­விக்­கப்­பட்­டது.

சொத்து முக­வர்­கள் என்று கூறிக்­கொண்ட மோச­டிக்­காரர்­கள், ஃபேஸ்புக், கரோ­செல் போன்ற தளங்­களில் வீட்டு வாடகை தொடர்­பான போலி­யான பதி­வு­களை பதி­வேற்­றம் செய்­யும்­படி சமூக ஊடகப் பய­னா­ளர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­படு­வார்­கள்.

அவ்­வாறு தங்­க­ளின் உண்­மை­யான சமூக ஊட­கப் பக்­கங்­களில் போலி­யான பதி­வேற்­றங்­கள் போடும் பய­னா­ளர்­கள் ஒவ்­ வொரு­வ­ருக்­கும் மோசடி நபர் $50 கொடுத்­தார்.

உதா­ர­ணத்­துக்கு, 22 வயது மாண­வர் ஒரு­வர், கரோ­செல் தளத்­தில் மின்­னி­லக்க விற்­பனை நிர்­வாகி பற்­றிய வேலை விளம்­பரத்­தைப் பார்த்து, அதற்­காக விண்­ணப்­பித்து இந்த வலை­யில் சிக்­கிக்­கொண்­டார்.

'ஸ்கேம்­ஷீல்டு' எனும் செய­லியை தங்­கள் திறன்­பே­சி­யில் மக்­கள் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ளும்­படி காவல்­துறை ஊக்கு­விக்­கு­கிறது.

மேலும் தங்­கள் வங்­கிக் கணக்கு, சமூக ஊட­கம், சிங்­பாஸ் கணக்­கு­க­ளுக்கு இரண்டு கட்ட பாது­காப்பு அம்­சத்­தைச் சேர்த்­துக்­கொள்­ளும்­ப­டி­யும் ஊக்கு­விக்­கப்­ப­டு­கிறது.

பேநவ் போன்ற இணைய வங்கி பரி­வர்த்­த­னை­க­ளுக்கு வரம்­பை­யும் அமைத்­துக்­கொள்ள வேண்­டும்.

மோசடி தொடர்­பான அறி­கு­றி­கள் பற்றி அறிந்­து­கொள்ள பொது­மக்­கள் www.scamalert.sg எனும் இணை­யத்தளம் அல்­லது 1800-722-6688 எனும் மோச­டிக்கு எதி­ரான நேர­டித் தொலை­பேசி எண்ணை அணு­க­லாம்.

"மிகக் குறைந்த முயற்­சி­யில் கவர்ச்­சி­யான சம்­ப­ளம் வழங்­கும் வேலை­களை நம்பி ஏமாற வேண்­டாம்," என்­றும் காவல்­துறை அறி­வு­றுத்­து­கிறது.

இப்­ப­டிப்­பட்ட குற்­றங்­கள் பற்றி தக­வல் அளிக்க விரும்­பு­வோர் 1800-255-0000 எனும் காவல்­து­றை­யின் எண்­ணிலோ அல்­லது www.police.gov.sg/iwitness எனும் இணை­யத்தளம் மூல­மா­கவோ தெரி­விக்­க­லாம்.