பூகிஸ் தாக்குதல்: மாது, பதின்ம வயது இளையர் மீது குற்றச்சாட்டு பதிவு
ஈராண்டுகளுக்கு முன், 2021ல் தாக்குதலில் ஈடுபட்டதன் தொடர்பில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட 18 வயது இளையர்தான் கடந்த திங்கட்கிழமை பூகிஸ் வட்டாரத்தில் மற்றொரு தாக்குதலில் ஈடுபட்டார். முன்னைய குற்றத்துக் காக அவர் 2022ல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் பிணையை மீறியதற்காக அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.
2021 ஜூலையில் நிகழ்ந்த தாக்குதலில் அவர் ஈடுபட்ட போது அவருக்கு வயது 17 என்பதால் அவரது பெயரை வெளியிட முடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர், இளையர் சட்டத்தின்படி பாதுகாக்கப்படு கிறார்கள்.
இந்தோனீசியரான அந்த இளையர் மீதும் 23 வயது நூர்லியானா ஹஸுலியானி எனும் மாது மீதும் தாக்குதல் நடத்திய ஒரு குற்றச்சாட்டு நேற்று சுமத்தப்பட்டது. இந்த இருவரும், 22 வயது முகம்மது குஃப்ரான் சினார்ஃபத்லி எனும் மற்றோர் ஆடவருடன் சேர்ந்து கடந்த திங்கட் கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஜாலான் குபோரில் உள்ள ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் துருவ கத்தியைக் கொண்டு ஆடவர் ஒருவரைத் தாக்கியதாக நம்பப்படு கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இருவரின் வழக்கு ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குஃப்ரான் மீது இன்று குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஆயுதத்தைக் கொண்டு ஒருவரைத் தாக்கும் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதாவது இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம். சிங்கப்பூரரான நூர்லியானா பெண்ணாக இருப்பதால், அவருக்குப் பிரம்படியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஈசூன் சாலையில் தீப்பிடித்த கார்
விபத்து நேர்ந்தவுடன் நேற்று முன்தினம் ஈசூனில் கார் ஒன்றில் தீப்பிடித்துக்கொண்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன் தீ அணைக்கப்பட்டு விட்டது. அதில் எவருக்கும் காயமில்லை. காணொளியில் பதிவான காட்சியில், ஈசூன் அவென்யூ 1, சிலேத்தார் வெஸ்ட் லிங்க் சந்திப்புக்கு அருகில் கார் எரிந்துகொண்டிருந்தது தெரிந்தது (படம்). காரில் தீப்பிடித்த சம்பவம் பற்றி தனக்கு 5.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காரின் இயந்திரத்தில் பிடித்த தீ நீரைப் பீய்ச்சியடித்து அணைக்கப்பட்டது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
தீப்பிடிப்பதற்கு முன் அந்த கார் மற்றொரு காருடன் மோதியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையில் 2022ல் வாகனம் தொடர்பான தீச்சம்ப வங்கள் 31.6% அதிகரித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இது 2021ன் எண்ணிக்கையை விட 155 சம்பவங்கள் அதிகம்.
மின்வாகனங்களுக்கு இரு நாடுகளிலும் மின்னூட்டம் செய்ய பொது வசதி
மின்சார வாகனங்களின் ஓட்டுநர்கள் எல்லை தாண்டிய பிறகு மலேசியாவில் தங்கள் வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்ய அங்கு புதிதாக 300க்கு மேற்பட்ட மின்னூட்டு நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கட்டமைப்பின் மின்னூட்டு நிலைகள் சிங்கப்பூரிலும் அமைக்கப்படும். தொடக்கமாக, எண் 38, அங் மோ கியோ தொழிற்பேட்டை 2ல் நான்கு அதிவிரைவு மின்னூட்டு நிலைகள் அமையும்.
சிஙகப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படுத்தப்படும் மின்னூட்டு நிலைகளுக்கான சேவை கட்டணத்தை அந்தக் கட்டமைப்பின் திறன்பேசிச் செயலி மூலம் செலுத்தலாம். தாங்கள் செல்லவிருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள மின்னூட்டு நிலைகளின் விவரங்களை அந்தச் செயலி ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கும்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வரும் வாகன ஓட்டுநர்களும் அதே செயலியைக் கொண்டு இங்குள்ள மின்னூட்டு நிலைகளின் விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். யின்சின் கிரீன் டெக்னாலஜிஸ் எனும் மலேசிய நிறுவனத்துக்கும் எல்எச்என் எனும் சிங்கப்பூர் சொத்து மேலாண்மை சேவைகள் நிறுவனத் துக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் விளைவாக இந்தத் தளம் வழங்கப்படுகிறது. மின்னூட்டு நிலை சேவைகளுக்கான கட்டணம் அதன் வகை, கூடம் இருக்கும் இடம் ஆகியவற்றைப் பொருத்து அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

