நீரிழிவு விழி வெண்படல நரம்பியல் பிரச்சினைக்கு உத்தேசத் தீர்வு: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

நீரிழிவு விழி வெண்படல நரம்பியல் பிரச்சினைக்கு உத்தேசத் தீர்வு: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

2 mins read
c32b43c9-c2a5-4b61-9c46-5afcce2dc8fc
-

நீரி­ழிவு நோயால் கண்­ணில் ஏற்­படும் விழி வெண்­ப­டல நரம்­பி­யல் பிரச்­சி­னைக்கு, ரத்­தக் கொழுப்­பைக் குறைக்க பயன்­ப­டுத்­தும் மருந்­தான ஃபெனோஃபைபி­ரேட்­டைப் பயன்­ப­டுத்­தி­னால் அப்­பி­ரச்­சினை தீரக்­கூ­டும் என்று சிங்­கப்­பூர் ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

விழி வெண்­ப­டல நரம்­பி­யல் பிரச்­சினை ஏற்­பட்­டால் கண் பார்வை முற்­றி­லும் இழக்­கும் அபா­யம் இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

நீரி­ழிவு நோயா­ளி­களில் 47 விழுக்­காட்­டி­லி­ருந்து 64 விழுக்­காட்­டி­ன­ருக்கு இந்த விழி வெண்­ப­டல நரம்­பி­யல் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ரத்­தத்­தில் இருக்­கும் சர்க்­கரை அளவு அதி­க­மாக இருக்­கும்­போது அது விழி வெண்­ப­ட­லத்­தில் உள்ள நரம்­பு­க­ளைப் பாதித்து அழற்­சியை ஏற்­ப­டுத்­து­கி­ற­து.

இத­னால் கண்­ணில் எரிச்­சல் ஏற்­பட்டு இலே­சான பாதிப்பு ஏற்­ப­டு­வோ­ருக்கு விழி வெண்­ப­ட­லத்­தில் உணர்ச்­சி­கள் இல்­லாத நிலை ஏற்­ப­ட­லாம்.

மிக கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளானோர் கண் பார்­வையை இழக்­கக்­கூ­டும்.

தற்­போது இதைக் குணப்­ப­டுத்த மருந்து ஏதும் இல்லை. நிலை­மை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க கண் சொட்டு மருந்து மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

ஆனால் இது விரை­வில் மாறக்­கூ­டும். சிங்­கப்­பூர் கண் ஆய்­வுக் கழ­கம், சிங்­கப்­பூர் தேசிய கண் மையம், சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை, டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்ளி ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 15 ஆய்­வா­ளர்­கள் நடத்­திய சோத­னைத் திட்­டம் மூலம் இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

30 நாள்­க­ளுக்கு நடத்­தப்­பட்ட சோத­னைத் திட்­டத்­தின்­போது நீரி­ழிவு நோயால் விழி வெண்­ப­டல நரம்­பி­யல் பிரச்­சினை ஏற்­பட்ட 30 நோயா­ளி­க­ளுக்கு ஃபெனோஃபைபி­ரேட் மருந்து தரப்­பட்­டது. அந்த நோயா­ளி­க­ளுக்கு ஒவ்­வொரு நாளும் 100 மில்­லி­கி­ராம் முதல் 300 மில்­லி­கி­ராம் வரை ஃபெனோஃபைபி­ரேட் மருந்து கொடுக்­கப்­பட்­டது.

இதன்மூலம் அவர்களது விழி வெண்படலத்தில் உள்ள நரம்புகள் வலுவடைந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த மருந்து கட்­டுப்­ப­டி­யான விலை­யில் விற்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

200 மில்­லி­கி­ராம் மாத்­திரை சிங்­கப்­பூ­ரில் தோரா­ய­மாக 85 காசு முதல் $1.10 வரை விற்­கப்­ப­டு­கிறது. நீரி­ழிவு நோய் கார­ண­மாக விழி வெண்­ப­டல நரம்­பி­யல் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்ட குறைந்­தது 200 நோயா­ளி­க­ளுக்கு சோத­னைத் திட்­டத்­தின்­கீழ் இந்த மருந்தை ஆய்­வா­ளர்­கள் தந்து தங்கள் கண்­டு­

பி­டிப்பை உறுதி செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.